Shrutika Arjun: ஸ்ருதிகாவை இந்த காரணத்துக்காக கதறவிட்ட இந்தி பிக்பாஸ்.. கலாய்த்த கணவர் அர்ஜுன்!
மும்பை: சூர்யா ஜோடியாக ஸ்ரீ படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். தன்னுடைய பள்ளி பருவத்திலேயே இவர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து விட்டார். தொடர்ந்து தித்திக்குதே, ஆல்பம் உள்ளிட்ட படங்களில் நடித்த போதிலும் இவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை.
இதையடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டிலான ஸ்ருதிகா அர்ஜுன் தொடர்ந்து பிசினஸிலும் சாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூலம் தன்னுடைய ரீ என்ட்ரியை பலமாக அமைத்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை என்ற போதிலும் டிவி நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து பங்கேற்று வருகிறார்.

நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்: நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் சூர்யாவுடன் ஸ்ரீ என்ற படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். பிரபல நடிகர் மறைந்த தேங்காய் ஸ்ரீநிவாசனின் பேத்தி என்ற அடையாளத்துடன் கோலிவுட்டில் அறிமுகமான ஸ்ருதிகா, தொடர்ந்து ஆல்பம் தித்திக்குதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகினார். அர்ஜுன் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ருதிகா அர்ஜுனுக்கு ஒரு மகன் உள்ளார். சினிமா கை கொடுக்கவில்லை என்ற போதிலும் இவர் பிசினஸில் மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறார்.
குக் வித் கோமாளி டைட்டில் வின்னர்: ஸ்ருதிகா மிகப் பெரிய அளவில் தன்னுடைய பிசினஸை கொண்டு சென்றுள்ளார். ஆயினும் சினிமாவில் தன்னால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை என்ற தன்னுடைய வருத்தத்தை சமீபத்தில் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருந்தார். சினிமா கை கொடுக்கவில்லை என்ற போதிலும் இவருக்கு டிவி மிகச் சிறப்பாக கை கொடுத்துள்ளது. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீடியாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருந்த ஸ்ருதிகா அர்ஜுன், அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய நடை உடை பாவனைகளால் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும் வெற்றி கொண்டார்.
இந்தி பிக்பாஸ் 18 போட்டியாளர்: அடுத்தடுத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் ஸ்ருதிகா, அடுத்தடுத்த யூடியூப் சேனல்களுக்கும் பேட்டிகளை கொடுத்து வந்தார். இவர் தமிழ் பிக் பாஸில் இடம் பெறுவார் என்று நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தமிழில் இவர் இணையவில்லை. மாறாக பாலிவுட்டில் சல்மான்கான் நடத்தி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசனில் தற்போது ஸ்ருதிகா அர்ஜுன் இணைந்துள்ளார். இதன் மூலம் தென்னிந்திய மொழியிலிருந்து இந்தி பிக் பாஸில் இணைந்த முதல் பிரபலம் என்ற பாராட்டையும் பெற்றுள்ளார். தமிழிலிருந்து இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற ஸ்ருதிகாவிற்கு துவக்கத்தில் அதிகமான வரவேற்பு கிடைக்கவில்லை.
தமிழ் சொல்லிக்கொடுத்த ஸ்ருதிகா: ஆனால் தன்னுடைய கலகலப்பான பேச்சு மூலம் சக போட்டியாளர்களையும் ரசிகர்களையும் சிறப்பாக கவர்ந்து வருகிறார் ஸ்ருதிகா அர்ஜுன். இவர் இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது தமிழில் பேசி பிக் பாஸிடம் மாட்டிக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. இதனிடையே சக போட்டியாளருக்கு இவர் தமிழ் சொல்லிக் கொடுத்த வீடியோவும் வெளியாகி மிகச் சிறப்பாக ட்ரெண்டானது. இதனிடையே இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் இந்த வாரம் எலிமினேட் ஆவாரா என்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அழ வைத்த போட்டியாளர்கள்: இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முன்னதாக தான் பேசும் இந்தி குறித்து பலரும் கிண்டல் அடிப்பதாக சக போட்டியாளர் ஒருவரிடம் குறை கொட்டிக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. இவ்வாறு அனைத்து விஷயங்களையும் முகத்திற்கு நேராக பேசி ரசிகர்களை கவர்ந்த ஸ்ருதிகா அர்ஜுனை தற்போது சக போட்டியாளர்கள் சிலர் சேர்ந்து அழ வைத்துள்ளனர். முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் பேசிய ஸ்ருதிகா அர்ஜுன் தனக்கு டீ குடிப்பது மிகவும் பிடித்தமான விஷயம் என்று கூறியிருந்தார். ஆனால் டீ என்றால் அதில் டீ தூள், பால் என அனைத்தையும் சேர்த்து செய்யப்படும் டீ தான் தனக்கு பிடித்தமானது என்றும் மாறாக பிளாக் டீ குடிக்கும் வழக்கம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். பிளாக் டீ என்பது சுடுதண்ணீரை குடிப்பது போன்றது என்றும் அவர் கலகலப்பாக பேசியிருந்தார்.
கலாய்த்த கணவர் அர்ஜுன்: இந்நிலையில் தற்போது இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் டீ குடிக்க செல்லும் போதெல்லாம் பால் தீர்ந்து விட்டதாக சக போட்டியாளர்கள் கூறுவதாக அமைந்து வருகிறது. மேலும் பிளாக் டீ குடிக்குமாறு ஸ்ருதிகாவிடம் அவர்கள் கூறுவதையும் பார்க்க முடிந்தது. இதனால் ஸ்ருதிகா அர்ஜுன், டீ குடிக்க முடியாமல் நிகழ்ச்சியில் அழுததையும் பார்க்க முடிந்தது. இதனிடையே, இதன் வீடியோவை தன்னுடையஇன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்ருதிகாவின் அர்ஜுன், இதுதான் கர்மா என்றும் தற்போது தங்களின் அருமை உனக்கு தெரிகிறதா என்றும் கேட்டுள்ளார். ஒரு தேநீருக்காக அங்கே ஸ்ருதிகா அழுதுக் கொண்டிருக்க அதை தற்போது அர்ஜுன் கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











