ஜனனியை லவ் பண்றீங்கன்னு நினைச்சேன்.. அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதிகா.. சமாளித்த அமுதவாணன்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஷிவின், அமுதவாணன், விக்ரமன் உள்ளிட்டவர்கள்.
இவர்கள் மூவரும் தற்போது ஸ்ருதிகா நடுவராக உள்ள விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமுதவாணனை பார்த்து ஸ்ருதிகா தாறுமாறாக கேள்வி கேட்க, அவர் திணற நிகழ்ச்சியே களைகட்டியது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி 21 போட்டியாளர்களுடன் துவங்கி தொடர்ந்து அடுத்தடுத்த வித்தியாசமான டாஸ்க்குகள் உள்ளிட்டவற்றால் ரசிகர்களை கட்டிப் போட்டது. கடந்த மாதம் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.

வெற்றி பெற்ற அசீம்
21 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி நுழைய நிகழ்ச்சி களைகட்டியது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற, நிகழ்ச்சியின் இறுதியாக மூன்று போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் போட்டியின் சிறப்பம்சம்
பிக்பாஸ் போட்டியின் முக்கியமான அம்சமே ஒரே வீட்டில் இருக்கும் வித்தியாசமான துறைகளை சேர்ந்த போட்டியாளர்கள்தான். அவர்களின் சந்தோஷம், துக்கம் அனைத்தையும் அந்த வீட்டில் சக போட்டியாளர்களுடன் பகிர்ந்துக் கொள்வதும், சண்டை சச்சரவுகளை மீறி அவர்கள் எப்படி ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதையும் கான்செப்டாக பிக்பாஸ் நிகழ்ச்சிக் கொண்டுள்ளது.

ஏராளமான ரசிகர்கள்
இந்நிலையில் கடந்த மாதத்தில் நிறைவடைந்த சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம், ஷிவின், அமுதவாணன், விக்ரமன் என அதிகமான போட்டியாளர்கள் சக போட்டியாளர்களுக்கு சிறப்பான டப் கொடுத்தனர். இதையடுத்து இவர்களுக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகியுள்ளனர்.

ஸ்ருதிகா நடுவராக செயல்பட்ட நிகழ்ச்சி
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன், அதன் போட்டியாளர்கள், பொதுவெளியில் அதிகமாக காணப்படுகின்றனர். தற்போது விஜய் டிவியின் மற்றொரு நிகழ்ச்சியில் ஷிவின், அமுதவாணன், விக்ரமன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த சீசனின் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா நடுவராக உள்ளார்.

ஜனனியை லவ் பண்றீங்கன்னு நினைச்சேன்
அவர் ஒரு கட்டத்தில் அமுதவாணனை பார்த்து, அவர் ஜனனி லவ் செய்வதாக தான் நினைத்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள், நடுவர்கள் என அனைவரும் ஷாக்காகினர். இதையடுத்து அவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளதாக ஷிவின் கூறினார்.

ஜனனி தங்கை போன்றவர்
தொடர்ந்து பேசிய அமுதவாணன், ஜனனி தன்னுடைய கூட பிறக்காத தங்கையை போன்றவர் என்று கூற, தனக்கேயுரிய ஸ்டைலில் ஸ்ருதிகா, ஐயய்யோ, சாரி என்று கேட்க நிகழ்ச்சி களைகட்டியது. நிகழ்ச்சியின் ஆங்கராக செயல்பட்ட பாலா, ஸ்ருதிகா இது சிரிக்க விடற ஷோ, குடும்பத்தை பிரிச்சி விடற ஷோ இல்ல என்று கூறி நிகழ்ச்சி மேலும் சிறப்பாக மாறியது.


Click it and Unblock the Notifications











