போன டிசம்பர்ல கல்யாணம், இந்த டிசம்பர்ல டைவர்ஸ்... அறிவித்தார் ஸ்வேதா
மும்பை: நடிகை ஸ்வேதா பாசு, தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
தமிழில், உதயா நடித்த ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், கருணாஸ் நடித்த சந்தமாமா உட்பட சில படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு பிரசாத். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இவரும் இவரது நீண்ட நாள் நண்பரான இந்திப் பட இயக்குனர் ரோகித் மிட்டலும் காதலித்து வந்தனர். கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.இவர்கள் திருமணம் செய்துகொள்ள இயக்குனர் அனுராக் காஷ்யப்தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தனது திருமணத்தை முறித்துக்கொண்டதாக ஸ்வேதா பாசு பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர், பல மாத யோசனைக்குப் பிறகு இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். இம்முடிவை இருவரும் சேர்ந்தே எடுத்துள்ளோம். எல்லா புத்தகங்களையும் அட்டை டூ அட்டை படித்துவிட முடியாது. அதற்கு புத்தகம் மோசமாக இருக்கிறது என்று அர்த்தமல்ல. ஈடுசெய்ய முடியாத சில நினைவுகளுக்கும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி ரோகித். இனிமையான வாழ்க்கை உன் முன் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஸ்வேதா.
ஐதராபாத்தில் பாலியல் தொழில் செய்ததாகக் கைது செய்யப்பட்டவர், ஸ்வேதா பாசு என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











