நட்சத்திர ஓட்டலில் அதிரடி ரெய்டு.. பிரபல தெலுங்கு நடிகை கைது.. போதைப் பொருட்கள் பறிமுதல்!
மும்பை: போதைப் பொருள் வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், தெலுங்கு நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரபல இந்தி நடிகர், சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
இதை அடுத்து இந்தி சினிமா உலகில் போதைப் பொருள் விவகாரம் பரபரப்பாகி இருக்கிறது.

பைகுலா சிறை
சிறை இந்த வழக்கில், சுஷாந்த் சிங் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி, அவர் சகோதரர் சோவிக் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதம் பைகுலா சிறையில் இருந்த நடிகை ரியா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து போதைப் பொருள் விவகாரத்தில் விசாரணை நடந்து வந்தது.

அர்ஜுன் ராம்பால்
நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரில்லாவின் தம்பி அஜிசிலோஸ் கைது செய்யப்பட்டர்

நடிகை பாரதி சிங்
பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நதியத்வாலா மனைவி ஷபானா சயீத் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மாரிஜுவானா கைப்பற்றப்பட்டது. நகைச்சுவை நடிகை பாரதி சிங்கின் வீடு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சஞ்சனா கல்ராணி
கன்னட சினிமாவில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகை சஞ்சனாவுக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. கேரள மாநிலத்திலும் போதைப் பொருள் தொடர்பான சோதனை நடந்து வருகிறது. சமீபத்தில் பிரிஸ்டி பிஸ்வாஸ் என்ற நடிகை கைது செய்யப்பட்டார்.

ஸ்வேதா குமாரி
இந்நிலையில் மும்பை மற்றும் கோவாவில் சில குறிப்பிட்ட ஓட்டல்களில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், ஸ்வேதா குமாரி என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தெலுங்கு நடிகை
ஹீரோயினாகவும் 27 வயதான அவரிடம் விசாரித்தபோது கன்னடத்தில் ரிங் மாஸ்டர் உட்பட சில படங்களிலும் தெலுங்கில் சில படங்களில் இரண்டாவது ஹீரோயினாகவும் நடித்துள்ளது தெரியவந்தது. அவரை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப் பொருள் வழக்கில் தென்னிந்திய நடிகை ஒருவர் கைதாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











