twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படகுப் போட்டியின்போது அசிங்கமாக நடந்து கொண்டார் காங். எம்.பி. - ஸ்வேதா மேனன்

    By Sudha
    |

    கொல்லம்: கொல்லத்தில் நடந்த ஒரு படகுப் போட்டியின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் தன்னிடம் அசிங்கமாக நடந்து கொண்டதாக கேரள நடிகை ஸ்வேதா மேனன் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஸ்வேதாவிடம் சில்மிஷம் செய்த எம்.பியின் பெயர் பீதாம்பர குருப்பு என்று தெரிய வந்துள்ளது. ஆனால் ஸ்வேதாவின் புகாரை குருப்பு மறுத்துள்ளார்.

    ஆனால் தனது புகார் உண்மையானதுதான், நான் சொல்வது உண்மைதான் என்று ஸ்வேதா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    மலையாள நடிகை

    மலையாள நடிகை

    ஸ்வேதா மேனன் மலையாள நடிகை ஆவார். இவர் தமிழிலும் அரவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

    தத்ரூப பிரசவக் காட்சியில் நடித்தவர்

    தத்ரூப பிரசவக் காட்சியில் நடித்தவர்

    களிமண்ணு என்ற மலையாளப் படத்திற்காக இவரது நிஜமான பிரசவத்தை படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி பின்னர் அடங்கின என்பது நினைவிருக்கலாம்.

    செக்ஸ் சில்மிஷ் புகார்

    செக்ஸ் சில்மிஷ் புகார்

    இந்த நிலையில் ஸ்வேதா கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. குருப்பு மீது செக்ஸ் சில்மிஷப் புகார் கூறியுள்ளார்.

    73 வயது எம்.பி.

    73 வயது எம்.பி.

    குருப்புக்கு வயது 73 ஆகிறது. இவர் கொல்லம் தொகுதி காங்கிரஸ் லோக்சபா உறுப்பினர் ஆவார். கொல்லத்தில் நடந்த பிரசிடென்ட் கோப்பை படகுப் போட்டியில் இவர் கலந்து கொண்டார். அப்போதுதான் ஸ்வேதாவைத் தொட்டு சிலமிஷம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    வெட்கக்கேடான செயல்

    வெட்கக்கேடான செயல்

    குருப்பின் பெயரைக் குறிப்பிடாமல் புகார் கூறியுள்ளார் ஸ்வேதா. இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைத் தொட்டு அநாகரீகமாக நடந்து கொண்டார் அந்த அரசியல்வாதி. இது வெட்கப்படகூடிய செயல். இது குறித்து கலெக்டரிடம் புகார் செய்து உள்ளேன். மேலும் இது குறித்து கூறுவதற்கு ஒன்றும் இல்லை என கூறினார்.

    நான் குற்றமற்றவன்

    நான் குற்றமற்றவன்

    ஆனால் குருப்பு இந்தப் புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் எனது பெயரை குறிப்பிட்டது துரதிருஷ்டவசமான சம்பவம். இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய புகார். தேர்தல் நெருங்கி வருவதால் இப்படிச் செய்துள்ளனர். இது அவதூறான புகாராகும். நான் அரசியல்வாதி என்பதால் இப்படிச் செய்துள்ளனர் என்றார்.

    இதுவரை வழக்குப் போடவில்லை

    இதுவரை வழக்குப் போடவில்லை

    இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதேசமயம், சம்பந்தப்பட்ட நடிகையிடமிரு்நது இதுவரை புகார் வரவில்லை. புகார் கொடுக்கப்பட்டால் நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

    மகளிர் ஆணைய உறுப்பினர் கண்டனம்

    மகளிர் ஆணைய உறுப்பினர் கண்டனம்

    இதற்கிடையே, ஸ்வேதாவுக்கு ஆதரவாக திரையிலகிலும், மகளிர் அமைப்புகளிடமிருந்தும் குரல்கள் கிளம்பியுள்ளன. மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் லிசி ஜோஸ் கூறுகையில், ஆணையம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரிக்கும் என்றார்.

    'அம்மா'விடமும் ஸ்வேதா புகார்

    'அம்மா'விடமும் ஸ்வேதா புகார்

    இதற்கிடையே தனக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அம்மா என்று அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத் தலைவரிடமும் புகார் கொடுத்துள்ளார் ஸ்வேதா மேனன்.

    இன்னொசன்ட்டிடம் பேசியுள்ளேன்

    இன்னொசன்ட்டிடம் பேசியுள்ளேன்

    இதுகுறித்து ஸ்வேதா மேனன் கூறுகையில், நான் இன்னொசன்ட் அங்கிளிடம் பேசியுள்ளேன். நடவடிக்கை தேவைப்பட்டால், அம்மாவிடம் ஆலோசனை நடத்திய பின்னர் எடுப்பேன் என்றார்.

    English summary
    Actress Shweta Menon was allegedly molested by an "elected representative" from the area at a function in Kollam, sparking strong protests from the Malayalam film fraternity and women outfits, which demanded stern action against the politician.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X