25 முறை ரீ டேக்.. பலமுறை அடித்தார்.. 50 வயது நடிகைக்கு நேர்ந்த கொடுமை!
சென்னை: மலையாள நடிகையான ஸ்வேதா மேனன் தமிழில், சிநேகிதியே, சாதுமிரண்டால், நான் அவனில்லை பாகம் 2, இணையதளம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தனக்கு படப்பிடிப்பின் போது நேர்ந்த அந்த மோசமான சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.
மாடல் அழகியான நடிகை ஸ்வேதா மேனன், மம்முட்டி நடித்து 1990ம் ஆண்டு வெளியான மலையாள படமான அனஸ்வரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, பாலிவுட்டிற்கு சென்ற இவருக்கு இஷ்க் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

30க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ள இவர், அமீர் கான் மற்றும் அஜய் தேவ்கன் நடித்த ஹம்கோ தும்சே ப்யார் ஹை மற்றும் பந்தன் போன்ற படங்களில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும், இவர், மலையாள சினிமாவில் பலேரி மாணிக்யம், சால்ட் என் பெப்பர் ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதை பெற்றார்.
தமிழ் படங்களில்: படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், சிநேகிதியே என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சாதுமிரண்டால் படத்திலும் நான் அவனில்லை இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் இணையதளம் என்ற படத்தில் நடித்தார் அதன் பிறகு இவர் தமிழ் பக்கம் தலைகாட்டாமல் வரிசையாக மலையாள படங்களை கையில் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.

25 முறை ரீ டேக்: இந்நிலையில், மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், ரதிநிர்வேதம் என்ற மலையாள படத்தின் போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். அதில், ரதிநிர்வேதம் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில், நடிகர் எனது பின்புறத்தில் அடிப்பது போன்ற ஒரு காட்சி வரும். அந்த காட்சி மட்டும் 25 முறை ரீ டேக் எடுத்தார்கள். அந்த நடிகர் என் பின்புறம் அடித்து அடித்து அந்த இடமே சிவந்து விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் பொருத்துக்கொள்ளமுடியாததால், இயக்குநரிடம் கோபமாக கத்தினேன் என்று ஸ்வேதா மேனன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இணையத்தில் அவர் அளித்துள்ள அந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

சர்ச்சைப் பேச்சு: அண்மையில் ஸ்வேதா மேனன் அளித்த பேட்டியில், என்னை கவர்ச்சி நடிகை என்று அழைக்கிறார்கள். அதற்கு நான் வருத்தப்படவில்லை. பிகினி அணிந்து நடிக்க வேண்டும் என்றாலும் நான் நடிப்பேன். கதைக்கு ஆடையில்லாமல் நடிப்பது தேவையான ஒன்றாக இருந்தாலும் கதைக்காக ஆடையில்லாமல் கூட நடிப்பேன். ஏன் என்றால் அது சினிமா என்று பேசி இருந்தார். அவரின் அந்த வீடியோ இணையத்தில் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











