பூ, பொட்டுக்கு ஆசை.. சில்க் ஸ்மிதாவின் நிறைவேறாத ஆசை.. கண்கலங்கிய நடிகை!

சென்னை: ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகி, வசீகரமான உடல் வனப்பு, மயக்கும் குரல், தனக்கென ஒரு கூட்டத்தை வைத்து இருந்த நடிகை சில்க் ஸ்மிதா நம்மை விட்டு பிரிந்து இன்றோடு 28 ஆண்டுகள் ஆகிறது. இந்த நாளில் அவரின் ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சில்க் ஸ்மிதா.ஆந்திராவில் பிறந்த விஜயலட்சுமிக்கு சில்க் ஸ்மிதா என பெயர் வைத்து அழகுப் பார்த்தவர் நடிகர் வினுசக்கரவர்த்தி.முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த், கமல், பிரபு, விஜயகாந்த்,சத்யராஜ்,கார்த்திக் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். சில்க் ஒரு காட்சியில் வந்தால் போதும், படம் வெற்றி தான் என தயாரிப்பாளர்கள் நினைத்ததால், சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர்.

silk smitha death anniversary

சில்க் ஸ்மிதா: சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே உச்சத்தை தொட்ட சில்க், கவர்ச்சிக்கு மட்டுமில்ல குணசித்திர கதாபாத்திரத்திலும் புகுந்து விளையாடினார். பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தில் கவர்ச்சியை தாண்டி தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் எடுத்தார் சில்க். 17 ஆண்டு சினிமா வாழ்க்கையில் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சில்க், தனது 35 வயதில் 1996 செப்டெம்பர் 23ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இன்று வரையிலும் இவரது மரணம் மர்மமாக உள்ளது.

நிறைவேறாத ஆசை: இந்நிலையில், நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு நாளான இன்று, இவருடன் இணைந்து நடித்த நடிகை ஷர்மிளா அவர் குறித்து பேசி உள்ளார். அதில், என்னை எல்லாருமே கவர்ச்சிய நடிகையாகத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், எனக்கு புடவை கட்டவேண்டும், பூ, பொட்டு வைத்துக்கொண்டு, நிறைய நகை போட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என ஆசை ஆனால், அது முடியாததால், வீட்டில் காலையில் இருந்து நைட் வரைக்கும் பூ, பொட்டு வைத்துக்கொண்டு வீட்டிலேயே இருப்பேன் என சொல்லி வருத்தப்பட்டா. ஆனால், கவர்ச்சி நடிகை என்பதால், அவளின் ஆசை அந்த அறையோடு முடிந்துவிட்டது. அவளை போல ஒரு நல்ல பெண்ணை பார்க்கவே முடியாது என்று அந்த பேட்டியில் ஷர்மிளா கூறியுள்ளார்

silk smitha death anniversary

நினைவு தினம்: இந்த நாளில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அவரது ரசிகர்கள் சில்க் ஸ்மிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து, தங்களது அஞ்சலியை செலுத்தி ஆதரவற்ற 25 பேருக்கு உணவு வழங்கி நலத்திட்ட பணிகளை செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X