For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மந்திரித்த கோழியாக மாற்றிய விழி அழகி.. உதடு சுளித்து உள்ளத்தை அள்ளிய.. சில்க்!

  |

  சென்னை : மாயவிழி அழகி.. இந்தியாவின் மார்லின் மன்றோ.. தென்னாட்டு பேரழகி என அழகில் இன்னும் எத்தனை சொல் உள்ளதோ அனைத்துக்கும் பொருத்தமானவர் சில்க் சுமிதா.

  வனப்பான உடல் அழகு, எடுப்பான இடை அழகு என அழகை மொத்த குத்தகை எடுத்தவர் சில்க் சுமிதா. வழு வழுக்கும் பட்டு மேனிக்கு சொந்தக்காரி என்பதால் சில்க் என்ற பெயர் கச்சிதமாக ஒட்டிக்கொண்டது. சொக்க வைக்கும் கண்களும், ஆடவரை வளைத்துப்போடும் உடல் வனப்பும், ஏக்கப்பெருமூச்சு விட்டு திரியும் இளசுகளின் கனவு தேவதையாக வலம் வந்த சில்க் சுமிதா பற்றி ஒரு குட்டி ரீவைண்ட்.

  சில்க் சுமிதாவை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் வினுசக்கரவர்த்தி. வில்லனாக, குணசித்திர நடிகராக இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், சில்க் என்று அறிமுகம் செய்ததால் இவர் பெயர் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது. இந்த பொண்ண எங்க பிடிச்சீங்க... னு கேட்காத ஆட்களே இல்லை சொல்லும் அளவுக்கு இவரின் பெயர் உச்சம்பெற்றது.

   நகைச்சுவை ஜாம்பவான்.. வைகைப்புயல் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள்... திக்குமுக்காடும் இணையதளம்! நகைச்சுவை ஜாம்பவான்.. வைகைப்புயல் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள்... திக்குமுக்காடும் இணையதளம்!

   அழகிய பிசாசு

  அழகிய பிசாசு

  80, 90களில் தமிழ் திரையுலகை அழகிய பிசாசாக ஆட்டிப்படித்தவர் சில்க் சுமிதா. இன்றைய 2கே கிஸ்ட்கள் தேடும் கிளுகிளுப்பு நாயகியாகவும் திகழ்கிறார். சில்க்கை பற்றி அறியாத இந்த காலத்து இளசுகள் கூட, சில்கின் படங்களையோ, பாடல்களை பார்க்கும் போது ‘வாவ் சூப்பர்' என கண் கொட்டாமல் பார்ப்பதும், சில்குக்கு இணை சில்க் நான் என்று வாஞ்சையாக புகழ்வது தான் சில்க்கின் ஸ்பெஷல்.

   பெண் ரசிகைகள்

  பெண் ரசிகைகள்

  ஒட்டுமொத்த திரை உலகையும் தனது ஒற்றை விழிப்பார்வையால் ஆட்டிப்படைத்தார் சில்க். தனது உடல் மொழியாலும்,கிளுகிளுப்பூட்டும் பார்வையாளும் கிறங்கி சொக்கியது ஆண்கள் கூட்டம் மட்டும் மல்ல. கவர்ச்சியையோ, கவர்ச்சி நாயகிகளையோ சிறிதும் விரும்பாத பெண்களும், பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் அழகால் சில்கின் தீவிர ரசிகை ஆனார்கள் என்பது சில்கின் வெற்றி

   நடிகருக்கு இணையான சம்பளம்

  நடிகருக்கு இணையான சம்பளம்

  ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு என உச்ச நட்சத்திரங்களின் படங்களில் சில்கின் ஒரு குத்துப் பாடலாவது இடம் பெற்றே ஆக வேண்டும். அப்போதுதான் படத்திற்கு சுவாரஸ்யம் கூடும் என்ற எண்ணத்தை ஒரு கவர்ச்சி நடிகையால் சாத்தியமாக்க முடியும் என்றால் அது சில்க்கால் மட்டுமே சாத்தியம். நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெற்ற ஈடு இணையற்ற ஒரு கவர்ச்சி நாயகி சில்க் சுமிதா.

   நிரப்ப முடியா இடம்

  நிரப்ப முடியா இடம்

  நேத்துராத்திரி எம்மா, அடியே மனம் நில்லுனா, பொன்மேனி உருகுதே போன்ற பாடலுக்கு சில்க் சுமிதாவை தவிர வேறு யாரும் உயிர் கொடுத்திருக்க முடியாது. அவருடைய கண் அசைவு, உடல் அசைவு என அனைத்தும் அவருக்கே உரித்தானது. இந்த பாடல்களுக்காக கூடிய கூட்டமும், ஓடின ஓட்டமும் கற்பனைக்கு அப்பாற்பட்ட சாதனை. சில்கின் இடத்தை பிடிக்க எத்தனை கவர்ச்சி நாயகிகள் குலுக்கிக்குலுக்கி , எல்லை மீறி கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்டாலும், சில்கின் இடத்தை இன்று வரை எவராலும் நிரம்ப முடியவில்லை என்பது தான் உண்மை.

   அழுத்தமான கதாபாத்திரம்

  அழுத்தமான கதாபாத்திரம்

  புகழின் உச்சியில் இருந்த போதும், தமிழ் திரையுலகை தன் கைப்பிடியில் வைத்திருந்த போதும் சாதாரண பெண்ணாகவே இருக்க ஆசைப்பட்டார் சில்க். சாவித்திரி, சரோஜா தேவி போன்றவர்களைப்போல ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து விடவேண்டும் என்பதே அவரின் ஆசை. அதற்காக ஒரு சில வாய்ப்புகள் வந்த போது அதையும் சாதுர்யமாக செய்தார் சில்க். கவர்ச்சி மட்டும் அல்ல குணச்சித்திரமும் வரும் என்பதை கிளுகிளுப்பு விரும்பிகளுக்கு உணர்த்தினார்.

   காலத்தின் கொடுமை

  காலத்தின் கொடுமை

  அலைகள் ஓய்வதில்லை படத்தில் எஸ்தர் கதாபாத்திரம் இன்றும் நின்று பேசுகிறது. கோழி கூவுது படத்தில் பூவே இளைய பூவே பாடலை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. சேலை கட்டி நடித்த போதிலும் இந்த பாடல் காட்சியில் தனது கண் அசைவிலும் இதழ் அசைவிலும் மிக அழகாக மிளிரி இருப்பார். பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறையில் ஏக்கம் நிறைந்த பெண்ணாக நடித்து அசத்தி இருப்பார் இந்த நாயகி. கவர்ச்சியை விரும்பாத ஒரு நடிகை, கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கவர்ச்சிக்கடலில் கரைந்து போனதுதான் காலத்தின் கொடுமை.

   வாழ்க்கையை முடித்து கொண்டார்

  வாழ்க்கையை முடித்து கொண்டார்

  சில்க் சுமிதா திரையில் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தில் இருந்தாரோ, அதற்கு நேர்மாறாக அவரின் சொந்த வாழ்க்கை அதலபாதாளத்தில் இருந்தது தான் வேதனை. காதல், ஏப்பேற்பட்டவரையும் அடி முட்டாளாக்கிவிடும். அதற்கு சில்க் சுமிதா மட்டும் என்ன விதிவிலக்கா?. அன்பை பார்த்து வராத காதல் அவர் உடலின் மினுமினுப்பு மீதும், இவரின் பணத்தின் மீதும் வந்தது தான் வேதனை. தனிமை, ஒன்றை அன்புக்காக ஏங்கிய வாழ்க்கை, காதல் முறிவு என ஒட்டுமொத்தமும் இவரை சடார் என பள்ளத்தில் மூழ்கடித்தது. திரையில் உச்ச நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருந்த போதே திடீரென தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தன் உடல் வனப்பால் மகிழ்வித்த தென்னாட்டு பேரழகி கேட்பாரற்று கிடந்தது தான் உச்ச பட்ச வேதனை.

  அச்சு அசலாக நடிகை சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் ஒரு பெண்ணின் டிக்டாக் வீடியோ
   குங்குமத்தின் கனவோடு,

  குங்குமத்தின் கனவோடு,

  கவிஞர் பழனி பாரதியின் ‘ஆடை விதவையாகி விட்டது' என்ற கவிதையில் சில வரிகள்
  குங்குமத்தின் கனவோடு,
  நீ ஒரு ஸ்டிக்கர் பொட்டாகவே வாழ்ந்து விட்டாய்...

  ஆம்.. இயற்கையான குங்குமம் ஒன்று செயற்கையான ஸ்டிக்கர் பொட்டானது தான் சில்க்கின் நெற்றியில் வாழ்க்கை எழுதிய விதி என்ற கவிதை வரிகளில் சில்கின் மன வேதனையை அப்பட்டமாக கூறி எழுதி இருப்பார் பழனி பாரதி. சாதாரண ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட, சில்க்கின் வாழ்க்கையில் கிடைக்கவில்லை. திருமண வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சில்க். இறுதி வரை அந்த வாழ்க்கையை தேடி அலைந்து ஏமாற்றப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும், கிடைக்காத ஒரு துய்மையான அன்புக்காக ஏங்கி கரைந்து, இறுதி வரை ஸ்டிக்கர் பொட்டாகவே வாழ்ந்து மறைந்து போனது தான் வேதனை.

  English summary
  Actress Silk Smitha was not only a galmour actress but a good human being.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X