For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா... சினிமா ரசிகர்களின் நீங்காத நினைவுகள்

  |
  சில்க் ஸ்மிதா வாழ்கை வரலாறு- வீடியோ

  சென்னை: கவர்ச்சி நடிகைக்கு போஸ்டர் அடித்து பிறந்தநாள் கொண்டாடுவதும் நினைவு தினம் அனுசரிப்பதும் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும். சில்க் ஸ்மிதாவை இன்றைக்கும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது. அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படும் இன்றைய தினம் நீங்காத நினைவுகளாய் ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்கிறார்.

  நடிகை சில்க் ஸ்மிதாவின் 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் அனைத்திலும் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சில்க் ஸ்மிதா நடித்து இன்றளவும் வரலாற்றில் நிலைத்து இருக்கிறார்.

  வித்யா பாலன் நடித்த டர்ட்டி பிக்சர், சில்க் ஸ்மிதா பற்றி கதை என்று பலர் சொன்னாலும், இன்னும் சொல்லப்படாத எத்தனையோ உண்மைகள், சம்பவங்கள் சில்க் ஸ்மிதாவிற்கும் அவரோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

  காந்தக்கண்ணழகி

  காந்தக்கண்ணழகி

  பட்டுப்போன்ற உடம்புக்கு சொந்தக்காரர். சில்க் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருத்தம் காந்தக்கண்ணழகி சில்க் ஸ்மிதா நடித்த எத்தனையோ படங்கள் இன்னமும் டிவியில் ஒளிபரப்பு ஆகும் பொழுது அவரது நீங்காத நினைவுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

  காத்திருந்த நடிகர்கள்

  காத்திருந்த நடிகர்கள்

  தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் பல படங்களில் நடித்தவர். தனக்கென ஒரு தனி ஸ்டைல், நளினம், வசீகரமான மயக்கும் குரல், இப்படி தனித்துவமான பெண்மணி எத்தனையோ சாதனைகளை செய்தார். இவரது கால்ஷீட்டிற்காக காத்திருந்த நடிகர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கின்றனர்.

  சில்க் ஸ்டைல்

  சில்க் ஸ்டைல்

  1960ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பிறந்த இவர், சினிமாவிற்கு வருவதுக்கு முன்பு இவர் மூன்று சக்கர பெரிய சைக்கிள் வண்டி வைத்து மாவு விற்றுக்கொண்டு இருந்தார். அப்படி ஒரு நாள் தன் முந்தானையை லாவகமாக மாற்றும் ஸ்டைலை பார்த்துத் தான் நடிகர் வினுசக்ரவர்த்தி சினிமாவுக்கு அழைத்து வந்தார் என்று பல முறை அவரே சொல்லி இருக்கிறார்.

  ரசிகர்களின் கனவுக்கன்னி

  ரசிகர்களின் கனவுக்கன்னி

  ஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களை தன்னுடைய சுண்டியிழுக்கும் காந்தக் கண்களால் கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரையும் சில்க் ஸ்மிதா என்று அனைவராலும் அறியப்பட்ட ஒப்பற்ற சினிமா கனவுக்கன்னி.
  நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முறையாக நடித்தார்.ஆனால், அந்த பெயரே இவருடைய நிரந்தர அடையாளமாக சினிமாவில் நிலைத்துவிட்டது.

  கவர்ச்சி நாயகி

  கவர்ச்சி நாயகி

  சினிமாவுக்கு வந்த பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். தனக்கு கவர்ச்சி மட்டுமே காட்டத்தெரியும் என்று சொன்னவர்களுக்கு அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது போன்ற படங்களில் தன்னுடைய அழுத்தமான நடிப்பினாலும் தனது ரசிகர்களின் மாபெரும் நம்பிக்கையினாலும் விஸ்வரூப வெற்றியும் அடைந்தார்.

  கமர்சியல் ஹிட்

  கமர்சியல் ஹிட்

  கமர்சியல் மசாலா திரைப்படங்கள் என்றால் ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா மட்டுமே அதிகம் தேவைப்பட்டார். இவர் நடித்த பல பாடல் காட்சிகள் இன்று வரை பிரபலம். கமலஹாசனுடன் ஆடிய நேத்து ராத்திரி எம்மா, தியாகராஜனுடன் அடியேய் மனம் நில்லுன்னா நிக்காதடி, போன்ற பல பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.

  திடீர் மரணம்

  திடீர் மரணம்

  இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் அனைத்திலும் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சில்க் ஸ்மிதா நடித்து இன்றளவும் வரலாற்றில் நிலைத்து இருக்கிறார். புகழின் உச்சியில் உள்ளபோதே, 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று தன்னுடைய வாழ்க்கையை சட்டென்று முடித்துக்கொண்டார்.

  மறக்க முடியாத நாயகி

  மறக்க முடியாத நாயகி

  பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து இன்னும் நிறைய சாதிக்க வேண்டியவர் நம்மை விட்டு பிரிந்தது தாங்கிக்கொள்ளவே முடியாத வேதனை தான். வித்யா பாலன் நடித்த டர்ட்டி பிக்சர், சில்க் ஸ்மிதா பற்றி கதை என்று பலர் சொன்னாலும், இன்னும் சொல்லப்படாத எத்தனையோ உண்மைகள், சம்பவங்கள் சில்க் ஸ்மிதாவிற்கும் அவரோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

  English summary
  Actress Silk Smitha's 17 years of cinema has spanned over 450 films in Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi. Vidya Balan's 'Dirty Picture' is a story about Silk Smitha, though many people have yet to tell the truth about Silk Smitha.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X