சிம்ரன்: தயாரிப்பாளராகவும் மாறிய சிம்ரன்.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. சும்மா மிரட்டுதே!
சென்னை: நடிகை சிம்ரன் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாயகியாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லி என பல்வேறு கேரக்டர்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார். சமீபத்தில் நடிகர் பிரஷாந்துடன் இணைந்து சிம்ரன் நடிப்பில் அந்தகன் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. முன்னதாக ரஜினி, சிவகார்த்திகேயனுடனும் கேரக்டர் ரோல்களில் நடித்திருந்தார்.
நடிகர்கள் விஜய், அஜித், பிரஷாந்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளவர் சிம்ரன். தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சிம்ரன், தொடர்ந்து குழந்தைகள் உள்ள நிலையிலும் படங்களில் நடித்து வருகிறார். தனக்கு எப்போதுமே சினிமாவில் இருப்பதே மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சிம்ரன்: நடிகை சிம்ரன 90களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஒன்ஸ்மோர் படம் முலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து விஜய், அஜித், பிரஷாந்த், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர். சிம்ரனின் இடுப்பழகிற்கும் நடன அசைவிற்கும் நடிப்பு திறமைக்கும் அழகுக்கும் மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் 90களில் ரசிகர்களை ஆட்டிப்படைத்த சிம்ரன் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி, சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.
சிம்ரன் ரீ-என்ட்ரி: தற்போது ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ள சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அந்தகன் படம் அவருக்கு மிகப்பெரிய வரவேறபை பெற்றத் தந்துள்ளது. முன்னதாக பிரஷாந்துக்கு ஜோடியாக படங்களில் நடித்துள்ள சிம்ரன், இநதப் படத்தில் நெகட்டிவ் ஷேடில் ஸ்கோர் செய்துள்ளார். இந்தப்படத்தை தொடர்ந்து சிம்ரன் நடிப்பில் துருவ நட்சத்திரம், வணங்காமுடி, சப்தம் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளராகவும் மாறவுள்ளதாக சிம்ரம் தெரிவித்துள்ளார். தன்னுடைய கணவருடன் இணைந்து படங்களை தயாரிக்கவுள்ளதாக முன்னதாக அறிவித்திருந்தார்.
சிம்ரன் நடிப்பில் தி லாஸ்ட் ஒன் படம்: இந்நிலையில் தற்போது சிம்ரன் தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தி லாஸ்ட் ஒன் படம் உருவாகவுள்ளது. லோகேஷ் குமார் இயக்கத்தில் முன்னதாக மை சன் ஈஸ் கே என்ற படம் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்று இதுவரை 4 விருதுகளை குவித்துள்ள நிலையில், அவருடன்தான் தற்போது சிம்ரன் இணைந்துள்ளார். இன்றைய தினம் அனைவருக்கும் விநாகர் சதுர்த்தி தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள சிம்ரன், இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். தன்னுடைய கேரியரில் இந்தப் படம் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக சிம்ரன் குறிப்பிட்டுள்ளார்.

தி லாஸ்ட் ஒன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்: இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்ரன் மிரட்டலாக காணப்படுகிறார். படத்தின் கதைக்களமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப்படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் விவரங்களும் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் சிம்ரனின் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











