Simran : தங்கை நினைவுநாளில் உருக்கமாக பதிவிட்ட சிம்ரன்..என்ன சொல்லியிருக்காக தெரியுமா?
மும்பை : நடிகை சிம்ரன் 90களில் கனவுக்கன்னியாக ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்.
நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் நடித்த சிம்ரன், தன்னுடைய கவர்ச்சியால் அதிகமான ரசிகர்களை தன்னிடம் கட்டிப் போட்டவர்.
குறிப்பாக இடையழகி என்ற பெயருடன் அதிகமான படங்களில் நடித்து வந்த சிம்ரன், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து ரஜினி உள்ளிட்டவர்களுடன் நடித்து வருகிறார்.

மோனல் குறித்து சிம்ரன் உருக்கம் : நடிகை சிம்ரன் 90களின் காலகட்டத்தில் மிகவும் பிசியான நடிகையாக இருந்தவர். விஜய், பிரஷாந்த், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். இவரது பல படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. நடிப்புடன் கவர்ச்சியையும் மிக்ஸ் செய்து ரசிகர்களை கவர்ந்த சிம்ரன், தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.
கதக் நடனத்தை கற்றறிந்த சிம்ரன் தற்போது 46 வயதிலும் சிறப்பான உடல்வாகுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த வயதிலும் தன்னுடைய உடல் பராமரிப்பை சிறப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார். சமீபத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடித்திருந்தார் சிம்ரன். மலையாளத்தில் மம்முட்டி, விக்ரமுடன் இணைந்து இந்திரபிரஸ்தம் என்ற படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்த சிம்ரனுக்கு அடுத்தடுத்த படங்கள் ஏற்றத்தையே கொடுத்தது.

தன்னுடைய இடையழகால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் சிம்ரன். அதேபோல நடனத்திலும் மிகச்சிறந்த இடத்தை அவர் தொடர்ந்து தக்க வைத்திருந்தார். அவருடைய தங்கை மோனலும், அக்காவின் வழியில் சினிமாவில் பார்வை ஒன்றே போதுமே என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார். நடிகர் குணாலுடன் இவர் சில படங்களில் நடித்திருந்தார். சிம்ரனை போலவே சிறப்பான இடத்தை சினிமாவில் பிடிப்பார் என்று கருதப்பட்ட நிலையில், கடந்த 2002ம் ஆண்டில் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்தார் மோனல்.
இவரது தற்கொலை திரைத்துறையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்றைய தினம் தன்னுடைய தங்கை மோனலின் நினைவுதினத்தையொட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சிம்ரன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இந்த நாளில் தன்னுடைய தங்கையை நினைவுகூர்வதாகவும் அவரை எப்போதும் மறக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கையின் சிறுவயது புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

சிஸ்டர் லவ் என்றும் அந்தப் பதிவில் சிம்ரன் குறிப்பிட்டுள்ளார். விஜய்யுடன் நடிப்பது அனைத்து நடிகைகளுக்கும் கனவு என்ற நிலையில், பத்ரி என்ற படத்தில் அவருடன் இணைந்து மோனல் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி இல்லை என்ற போதிலும் அந்தக் கேரக்டர் மற்றும் அவரது கவர்ச்சி அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. அவர் தொடர்ந்து நம்முடன் இல்லை என்பது மிகப்பெரிய சோகமே.


Click it and Unblock the Notifications











