எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க.. என் மகள் ஓடி போகல.. தப்பு தப்பா பேசுறாங்க.. பிரபல நடிகை கதறல்!

சென்னை: தன்னை பலரும் ஏமாற்றிவிட்டதாக அங்காடி தெரு பட நடிகை சிந்து கதறியுள்ளார்.

Recommended Video

Ajith, Vishal யாரும் உதவி பண்ணல | Angadi Theru Sindhu குமுறல்

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் அங்காடித் தெரு. வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் மகேஷ், அஞ்சலி, பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் சிந்துவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சிந்துவுக்கு கேன்சர்

சிந்துவுக்கு கேன்சர்


அங்காடித் தெரு மட்டுமின்றி பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிந்து கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு போராடும் வீடியோ வெளியானது. அந்த படத்தில் நடித்திருந்த சக நடிகரான பாண்டி சிந்து சிகிச்சைக்கு உதவி கேட்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

நடிகை திடுக் தகவல்

நடிகை திடுக் தகவல்

இந்நிலையில் நடிகை சிந்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் தனது மார்பக புற்று நோய், அதற்கான அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ளவர்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் தன்னுடைய நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் குறித்தும் திடுக் தகவலை ஷேர் செய்துள்ளார் நடிகை சிந்து.

ஏமாற்றிவிட்டார்கள்

ஏமாற்றிவிட்டார்கள்

அவர் பேசியிருப்பதாவது, " பலர் என்னை ஏமாற்றி விட்டார்கள். நான் செல்வ செழிப்போடு இருந்தபோது என் பக்கத்திலேயே தங்கியிருந்த எனது நண்பர்கள் இப்போது எங்கும் காணப்படவில்லை. எதையும் எதிர்பார்க்காமல், என் வாழ்க்கையில் ஏராளமானவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் உதவியுள்ளேன்.

மோசமாகப் பேசுகிறார்கள்

மோசமாகப் பேசுகிறார்கள்

என் மூலம் பயனடைந்தவர்கள் இப்போது என்னைப் புறக்கணிக்கிறார்கள். அவர்கள் என்னைப் பற்றியும் என் மகள் பற்றியும் மோசமாகப் பேசுகிறார்கள். சிலர் என் மகள் ஒருவருடன் ஓடிப் போய்விட்டார். என்னை அனாதையாக விட்டுவிட்டார் என்றும் சொல்கிறார்கள். நான் என் மகளுக்காக மட்டுமே வாழ்கிறேன்.

மனசு வலிக்கிறது

மனசு வலிக்கிறது

என் மகளை வளர்ப்பதற்கு நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன், மக்கள் என் மகளைப் பற்றி மோசமாகப் பேசுவதைப் பார்க்க எனக்கு மனசு வலிக்கிறது. நான் ஏற்கனவே சுமார் ஒன்றரை லட்சம் செலவு செய்துவிட்டேன். எனக்கு இன்னும் 4 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

நடிகை சிந்து கதறல்

நடிகை சிந்து கதறல்

இதைப் பார்க்கும் எவரும் எனக்கு உதவ முடியுமென்றால், உதவி செய்யுங்கள் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். நான் இயல்பு நிலைக்கு வந்தவுடன், நான் எப்போதும் செய்து கொண்டிருந்த சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்வேன். " இவ்வாறு உருக்கமாக பேசியுள்ளார் நடிகை சிந்து.

மன உளைச்சல்

மன உளைச்சல்

ஏற்கனவே நடிகை சிந்துவுக்கு, நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் உதவி செய்துள்ளனர். இந்நிலையில் தனது உயிருக்கு உயிரான மகளை பற்றி பலரும் அவதூறாக பேசி வருவது நடிகை சிந்துவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதை இந்த பேட்டியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X