அஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு!

சென்னை: நடிகர் அஜித் உதவி செய்ததாக வெளியான தகவல் அனைத்துத் பொய் என பிரபல நடிகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக தடைபட்டுள்ள இந்தப் படத்தின் ஷுட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

தெரியாமல் உதவி

தெரியாமல் உதவி

தமிழகம் முழுக்க ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் அஜித், பலருக்கும் தெரியாமல் ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதனை பல பிரபலங்கள் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

விளம்பரம் இல்லாமல்

விளம்பரம் இல்லாமல்

அண்மையில் கூட பிரபல நடிகரான பொன்னம்பலம், தனது நண்பரின் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு நடிகர் அஜித் எப்படி உதவினார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசினார். இது போல் பலருக்கும் எந்த விளம்பரமும் இல்லாமல் அஜித் சைலன்ட்டாக உதவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அங்காடித் தெரு சிந்து

அங்காடித் தெரு சிந்து

இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து நடிகை ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்காடித் தெரு படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிந்துதான் அவர். அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சிகிச்சைக்கு உதவிக்கோரியும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதெல்லாம் பொய்

அதெல்லாம் பொய்

அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிந்து, ரேணி குண்டா படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசனுக்கு முதலில் உதவி செய்தது நான்தான் என்று கூறியுள்ளார். மேலும் அஜித் உதவி செய்தார் என பரப்பப்படும் தகவல் எல்லாம் சுத்தப் பொய் என்றும் கூறியிருக்கிறார் சிந்து.

கடுப்பான ரசிகர்

கடுப்பான ரசிகர்

அதோடு அஜித் பலருக்கும் உதவி செய்து வருகிறார் என பரவும் தகவலிலும் உண்மையில்லை என்று கூறியுள்ளார். நடிகை சிந்துவின் இந்த பேச்சு அஜித்தின் ரசிகர்கள் கடுப்பாக்கியிருக்கிறது. அண்மையில் தன்னைப் பற்றியும் தனது மகளைப் பற்றியும் தவறான தகவல் பரபரப்ப படுவதாக கூறி பேட்டி ஒன்றில் கதறினார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X