Sivaangi :இப்படிப்பட்ட கணவர்தான் வேண்டுமாம்.. அடம்பிடித்த ஷிவாங்கி!
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக இணைந்து அதிரடி கிளப்பி வருகிறார் நடிகை ஷிவாங்கி.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று வருபவர் ஷிவாங்கி. இதன்மூலம் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான், வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படங்கள் இவரது நடிப்பில் வெளியான நிலையில், அடுத்ததாக காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

திருமணம் குறித்து பேசிய ஷிவாங்கி : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சி மூலம் தான் தன்னை முதன்முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டார் ஷிவாங்கி. தன்னுடைய இனிமையான குரலால் அழகான பாடல்களை கொடுத்தார். போட்டியின் இறுதிவரை அவரால் வரமுடியவில்லை என்றபோதிலும், இந்த நிகழ்ச்சி ஷிவாங்கிக்கு ஏராளமான படங்களில் பின்னணி பாடும் வாய்ப்புகளையும், ஆல்பம் பாடல்கள், இசை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து அந்த சேனலின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளியாகவும் இணைந்து தன்னுடைய சேட்டைகள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக இரண்டாவது சீசனில் அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோருடன் இணைந்து இவர் செய்த சேட்டைகள் ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. அஸ்வினை காதலிப்பதாக இவர் அடித்த லூட்டிகளால் அஸ்வின் திணறினார். எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் முழித்தார்.
இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் டான், வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஷிவாங்கிக்கு கிடைத்தது. தொடர்ந்து தற்போது காசேதான் கடவுளடா படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். தொடர்ந்து படங்கள், பின்னணி பாடல்கள், இசைக் கச்சேரிகள், ஆல்பம் பாடல்கள் என தன்னை பிசியாக வைத்துக் கொண்டாலும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

ஆனால் கடந்த சீசன்களை போலல்லாமல் தற்போது குக்காக களமிறங்கியுள்ளார் ஷிவாங்கி. கடந்த சீசன்களில் தண்ணீர் வைக்கக்கூட தெரியாது என்று அழிச்சாட்டியம் ஷிவாங்கியா இது என்று அனைவரும் ஆச்சர்ய கேள்வி எழுப்பும் வகையில் தற்போது இம்யூனிட்டி ரவுண்ட்களிலும் வெற்றி பெற்று பேண்ட்களை பெற்று வருகிறார். இதனால் பலரும் ஆச்சர்யமடைந்து வருகின்றனர். ஆனாலும் கடந்த இரு எபிசோட்களாக திணறலுடனான போட்டிகளையே இவர் எதிர்கொண்டு வருகிறார்.
கடந்த போட்டியிலும் ஷிவாங்கிக்காக தான் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டதாக விஜே விஷால் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், குக் வித் கோமாளி ஷோவிற்காக குக்குகள் அதிக கடுமையான பயிற்சிகளை மணிக்கணக்கில் மேற்கொள்வதாகவும், அதே போல கோமாளிகளும் அவர்களின் கெட்டப்புகளுக்காக மெனக்கெடுவதாகவும் ஷிவாங்கி தொடர்ந்த பதிவில் தெரிவித்திருநதார். இந்நிலையில் இந்த வார ஷோவில் அவர் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பதால் டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருந்தன. ஐஸ்கோலா டாஸ்க், தர்பீஸ் பழத்தை வைத்து ஸ்பெகட்டி என அசத்தினார் ஷிவாங்கி. அப்போது தன்னுடைய திருமணம் மற்றும் குழந்தைகள் குறித்து பேசியுள்ளார். இன்னும் 5 ஆண்டுகளில் திருமணம் செய்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மோனிஷா சொல்ல, அதே ஆசைதான் தனக்கும் உள்ளதாக ஷிவாங்கி தெரிவித்துள்ளார்.
தனக்கு வரும் கணவன் மிகவும் அமைதியாக ஒழுங்காக இருக்கும் நபராக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் ஷிவாங்கி தொடர்ந்து கூறினார். மேலும் தனக்கு குழந்தை பிறந்தால் அதை எப்படி வைத்து மேய்ப்பது என்றும் ஷிவாங்கி கேள்வி எழுப்பினார். இந்த வாரம் எலிமினேஷன் சுற்றில் 6 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், குறைந்த மதிப்பெண்களை பெற்று பேஸ் ஃஆப் சுற்றிற்கு ஷெரின், ஸ்ருஷ்டி மற்றும் ஷிவாங்கி சென்றனர். இதனிடையே அதிலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று இந்த வாரம் போட்டியிலிருந்து ஷெரின் வெளியேறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











