இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பாலோயர்களை தாண்டிய ஷிவாங்கி.. சோலோவாக கேக் வெட்டி கொண்டாடிய செல்லம்!

சென்னை : நடிகையாகவும் சின்னத்திரை பிரபலமாகவும் பாடகியாகவும் பல திறமைகளுடன் வலம் வந்துக் கொண்டிருக்கிறார் ஷிவாங்கி.

Recommended Video

இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பாலோயர்களை தாண்டிய ஷிவாங்கி.. சோலோவாக கேக் வெட்டி கொண்டாடிய செல்லம்!

சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் பங்கேற்று சிறப்பாக பாடல்களை பாடிய ஷிவாங்கி, சென்னையில் நடைபெறவுள்ள கச்சேரியிலும் பங்கேற்க உள்ளார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.

நடிகை ஷிவாங்கி

நடிகை ஷிவாங்கி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிதான் ஷிவாங்கிக்கு சிறப்பான அறிமுகத்தை முதல்முதலில் கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய அழகான பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்து மகிழ்வித்த ஷிவாங்கி, தன்னுடைய குழந்தைத்தனத்தால் அவர்களை சிறப்பாக கவர்ந்தார்.

அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்

அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்

இந்த நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி சீசன் 2 மற்றும் 3 நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. தொடர்ந்து தன்னுடைய சேட்டைகளாலும் அஸ்வின், புகழ், பாலா, மணிமேகலை உள்ளிட்டவர்களுடன் இணைந்து செய்த லூட்டிகளாலும் வாரந்தோறும் வித்தியாசமான கெட்டப்புகளாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

ஏராளமான பாடல் வாய்ப்புகள்

ஏராளமான பாடல் வாய்ப்புகள்

இதனிடையே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் வெளிப்பட்ட தன்னுடைய பாட்டுத் திறமையால் படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பும் இவருக்கு அதிகமாக காணப்படுகிறது. தனிப்பட்ட முறையில் ஆல்பம் பாடல்களிலும் இணைந்து கலக்கி வருகிறார். இதில் பாடுவதோடு, ஆக்டிங்கையும் செய்து வருகிறார்.

இசைக்கச்சேரிகளிலும் வாய்ப்பு

இசைக்கச்சேரிகளிலும் வாய்ப்பு

மேலும் இசைக்கச்சேரிகளில் பாடும் வாய்ப்பும் இவருக்கு தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற இசைக்கச்சேரிகளில் பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இது இவரது முதல் வெளிநாட்டு பயணம். இதையடுத்து வரும் செப்டம்பர் 9ம் தேதி சென்னையிலும் இவரது இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது.

நடிக்கும் வாய்ப்பு

நடிக்கும் வாய்ப்பு

மேலும் இத்தகைய பிரபலங்கள் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஷிவாங்கி நடித்திருந்த டான் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களிலும் கமிட்டாகி இவர் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஷிவாங்கி. தொடர்ந்து இவர் வெளியிடும் புகைப்படங்கள், போட்டோஷுட்கள், வீடியோக்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் ரசிகர்கள் எண்ணிக்கை 5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

5 மில்லியன் பாலோயர்கள்

5 மில்லியன் பாலோயர்கள்

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் லைவில் வந்த ஷிவாங்கி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். இந்த லைவிலேயே வந்த புகழ், தர்ஷன் உள்ளிட்டவர்களும் ஷிவாங்கிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தனர். தொடர்ந்து ஏராளமான கேக்குகளை அடுக்கி அதை வெட்டி, ரசிகர்களை வெறுப்பேற்றினார் ஷிவாங்கி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X