வெளிநாட்டுல போய் ரயில்ல குத்தாட்டம்.. ஷாருக் படப் பாட்டுக்கு ஆடிய ஷிவாங்கி!

சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் ஷிவாங்கி.

இந்த நிகழ்ச்சிகளின்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் ஷிவாங்கிக்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் டான் படம் வெளியானது.

தன்னுடைய பாடும் திறமையான ஏராளமான படங்களில் பாடி வருகிறார். இசைக்கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய பாடும் திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டுதான் முதலில் களமிறங்கினார் ஷிவாங்கி. ஆனால் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய பாடலால் மட்டுமின்றி குழந்தைத்தனமான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

அவரின் இந்த பேச்சு அவருக்கு குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. அந்த நிகழ்ச்சியில் இவரிடம் வசமாக சிக்கினார் அஸ்வின். அவர் அதிகமாக பேசாமல் இருந்த நிலையில், அதிகமாக பேசியே அவரை வம்பிழுத்தார் ஷிவாங்கி.

வரவேற்பை பெற்ற ஷிவாங்கி

வரவேற்பை பெற்ற ஷிவாங்கி

அவருடைய இந்த சேட்டைகள் மிகுந்த வரவேற்பை பெற்றன. தொடர்ந்து சீசன் 3யிலும் அவர் பங்கேற்றார். இந்த சீசனில் அஸ்வின் மிஸ்ஸிங். இருந்தபோதிலும் புகழ் உள்ளிட்ட அண்ணன்களை கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கினார். ஒவ்வொரு வாரமும் ரஜினி முதல் வடிவேலு வரை யாரையும் விட்டு வைக்காமல் கெட்டப்புகள் வேறு.

பாட்டுப் பாடும் திறமை

பாட்டுப் பாடும் திறமை

இதனிடையே தன்னுடைய பாடும் திறமையால் திரைப்பாடல்களில் தொடர்ந்து பாடி வருகிறார் ஷிவாங்கி. இவரின் பல வீடியோ ஆல்பம் பாடல்கள் சினிமா பாடல்களுக்கு இணையாக வரவேற்பை பெற்று வருகின்றன. இசைக் கச்சேரிகளிலும் பாடும் வாய்ப்பை தொடர்ந்து பெற்று வருகிறார் ஷிவாங்கி.

கனடாவில் இசைக்கச்சேரி

கனடாவில் இசைக்கச்சேரி

இதனிடையே சமீபத்தில் கனடாவில் இசைக்கச்சேரியில் பாடுவதற்காக புறப்பட்டு சென்றார். இவரின் முதல் வெளிநாட்டு கச்சேரி இது. இந்தக் கச்சேரியில் எஸ்பிபி சரண் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஷிவாங்கி பாடிய பாடல்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகின. தொடர்ந்து சிறப்பான பாடல்களை அழகாக பாடியிருந்தார்.

ரயிலில் சூப்பர் குத்தாட்டம்

ரயிலில் சூப்பர் குத்தாட்டம்

இதனிடையே கனடாவின் நயாகரா முதல் ரயில்வரை எதையும் விட்டு வைக்கவில்லை ஷிவாங்கி. நயாகரா நீர்வீழ்ச்சி முன்பு இவர் போட்ட ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இதனிடையே கனடாவில் ரயில் மேலே ஏறிக் கொண்டு, ஷாருக்கானின், தைய தைய பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

தைய தைய பாடல்

தைய தைய பாடல்

ஷாருக்கின் தைய தைய பாடல் மற்றும் அதற்கான நடனம் படம் வெளியான பொழுதில் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்தப் பாட்டிற்கு அதேபோல ரயிலில் ஆட்டம் போட்டுள்ளார் ஷிவாங்கி. இந்த வீடியோவும் லட்சக்கணக்கில் வியூசையும் லைக்சையும் பெற்றுள்ளது.

சேஃபாக நடனம் ஆடிய ஷிவாங்கி

சேஃபாக நடனம் ஆடிய ஷிவாங்கி

ஷாருக்கான் ஓடும் ரயிலின் மீது ஏறிக்கொண்டு இந்தப் பாட்டிற்கு குத்தாட்டம் போட்டிருப்பார். மனிதர் எங்கேயாவது கீழே விழுந்து விடுவாரோ என்ற பதட்டத்தை ரசிகர்களுக்கு அவர் ஏற்படுத்தியிருந்தார். ஆனால் ஷிவாங்கி எப்போதுமே சேஃப்தான். நின்றுக் கொண்டிருக்கும் ரயிலில் அதிலும் பக்கவாட்டில் ஏறித்தான் அவர் ஆடியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X