எனக்கு வெட்க வெட்கமா வருது.. ஷிவாங்கியின் வெட்கத்தால் அழகான குக் வித் கோமாளி ஷோ!
சென்னை : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளார் ஷிவாங்கி.
இவரது க்யூட் சேட்டைகள் மூலம் குக் வித் கோமாளியின் அனைத்து சீசன்களும் மிகவும் அழகாக ஆனது.
தற்போது கோமாளியில் இருந்து குக்காக மாறியுள்ளார். ஆனாலும் கோமாளியாக இருந்ததை அவ்வப்போது நினைவு கூர்ந்து வருகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தியுள்ளார் ஷிவாங்கி. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அந்த நிகழ்ச்சியில் அவரது வெள்ளந்தியான செயல்பாடுகள் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களில் பங்கேற்கும் வாய்ப்பு ஷிவாங்கிக்கு கிடைத்தது.

நடிகை ஷிவாங்கி
குறிப்பாக மணிமேகலை, புகழ், சுனிதா உள்ளிட்ட குக்குகளுடன் ஷிவாங்கி செய்த சேட்டைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. மேலும் இந்த நிகழ்ச்சி ஷிவாங்கிக்கு ஏராளமான பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. சிவகார்த்திகேயனுடன் டான், வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்கள் ஷிவாங்கி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
தொடர்ந்து காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களிலும் ஷிவாங்கி நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் ஏராளமான படங்களில் பாடும் வாய்ப்பும் ஷிவாங்கிக்கு அடுத்தடுத்து கிடைத்து வருகிறது. பல ஹிட் பாடல்களை பாடிவரும் ஷிவாங்கி, ஆல்பங்களையும் தனிப்பட்ட முறையில் வெளியிட்டு வருகிறார்.

சூப்பர் குக்கான ஷிவாங்கி
மேலும் இசைக் கச்சேரிகளிலும் பாடும் வாய்ப்பு ஷிவாங்கிக்கு கிடைத்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக மாறியுள்ளார். கடந்த சீசன்களில் ஒன்றுமே தெரியாமல் இருந்த ஷிவாங்கியா இவர் என்று ரசிகர்கள் கேட்குமளவிற்கு அடுத்தடுத்த சேலஞ்களில் வெற்றி பெற்று வருகிறார்.

ஷிவாங்கியின் வெட்கம்
இந்நிலையில் அவர் இந்த வார எபிசோடில் ட்ரெடிஷனல் ரவுண்டை எதிர்கொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். இதையடுத்து அவரிடம் அவரது திருமணம் குறித்து பேசியபொழுது, தனக்கு வெட்கமாக வருவதாக அவருக்கே உரிய ஸ்டைலில் கூறியது அனைவரையும் கவர்ந்தது. இடையில் ஷிவாங்கிக்கு திருமணம் என்றால் புகழ் கண்டிப்பாக சாப்பிட வந்துவிடுவார் என்று கோமாளி ஒருவர் கலாய்த்ததும் நடந்தது.


Click it and Unblock the Notifications











