குக்கா ஆயிட்டாடா.. நடுவர்களின் பாராட்டில் ஷிவாங்கி.. குக் வித் கோமாளியில் கண்கலங்கிய தருணம்!
சென்னை : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.
இந்த நிகழ்ச்சிகள் ஷிவாங்கிக்கு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி, தற்போது குக்காக ப்ரமோஷன் ஆகியுள்ளார்.

நடிகை ஷிவாங்கி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலம் சிறப்பான அடையாளத்தை பெற்றவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சி மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பு ஷிவாங்கிக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் அஸ்வின், புகழ், மணிமேகலை இவர்களுடன் ஷிவாங்கி அடித்த லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கோமாளியாக கலக்கிய ஷிவாங்கி
இந்த நிகழ்ச்சியில் விதவிதமான கெட்டப்புகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஷிவாங்கி, அந்த கெட்டப்புகளில் போட்டோஷுட் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதன்மூலம் லட்சக்கணக்கான பாலோயர்களையும் பெற்றார். இந்த நிகழ்ச்சிகள் இவருக்கு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.

டான் படத்தில் நடிப்பு
சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட ஷிவாங்கி தன்னுடைய க்யூட் பர்பார்மென்சால் அனைவரையும் கட்டிப் போட்டார். தொடர்ந்து வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடித்திருந்தார் ஷிவாங்கி.

அடுத்தடுத்த படங்கள்
தற்போது காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய இசைத் திறமையையும் வெளிக்காட்டி படங்களில் பாடல்களை பாடிவரும் ஷிவாங்கி, இசைக்கச்சேரிகளில் பங்கேற்பதுடன் ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆல்பங்களை தனிப்பட்ட முறையில் வெளியிட்டு வருகிறார்.

குக்காக களமிறங்கிய ஷிவாங்கி
இந்நிலையில் தற்போது துவங்கியுள்ள குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியில் இருந்து குக்காக ஷிவாங்கிக்கு ப்ரமோஷன் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தன்னுடைய டிஷ்களால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இந்த வார நிகழ்ச்சியில் கயிறுகட்டி கோலா உருண்டை மற்றும் செட்டிநாடு கிரேவி செய்து நடுவர்களை அசத்தியுள்ளார்.

ஷிவாங்கி குக் ஆயிட்டாடா
ஷிவாங்கி குக் ஆயிட்டாடா என்று செஃப் தாமு பாராட்ட, புகழ் உள்ளிட்ட அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரிக்க ஷிவாங்கி கண்கலங்கிய தருணம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து நிகழ்ச்சியில் வெற்றியாளராகவும் ஷிவாங்கி அறிவிக்கப்பட்டார்


Click it and Unblock the Notifications











