Sivaangi :குக் வித் கேமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் சிவாங்கி. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை : குக்வித் கோமாளி, சூப்பர் சிங்கர்ஸ் என விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஷிவாங்கி.

தன்னுடைய க்யூட் பர்பார்மென்சால் ரசிகர்களை தொடர்ந்து கட்டிப் போட்டு வருகிறார் ஷிவாங்கி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் கோமாளியாக அதிரடி கிளப்பினார்.

தற்போது 4வது சீசனில் குக்காக மாறியுள்ளார். அடுத்தடுத்து தன்னுடைய சிறப்பான குக்கிங்கால் நடுவர்களை அதிகமாக கவர்ந்து வருகிறார்.

Actress Sivaangi going to quit Cook with comali show

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் ஷிவாங்கி : விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் ஷிவாங்கி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த சீசன்களில் கோமாளியாக ரசிகர்களை கவர்ந்த ஷிவாங்கி, தற்போது 4வது சீசனில் குக்காக மாறியுள்ளார். கோமாளியாக பல்வேறு கெட்டப்புகளை போட்டு, அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர்,தற்போது குக்காகவும் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

சூப்பர் ங்கர்ஸ் நிகழ்ச்சிமூலம் அதிகமான படங்களில் பின்னணி பாடும் வாய்ப்புகளையும் ஆல்பம் பாடல்களில் பாடும் வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். மேலும் அதிகமான இசைக்கச்சேரிகளில் பாடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கனடாவில் இசைக்கச்சேரியில் பாடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களையும் செய்து வருகிறார். தனிப்பட்ட முறையில் பாடல்களையும் செய்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சிகள் ஷிவாங்கிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தார். தொடர்ந்து நடிகர் வடிவேலுவுடன் நாய் சேசர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் சிறப்பான கேரக்டரில் இவரை காண முடிந்தது. தொடர்ந்து காசேதான் கடவுளடா படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

Actress Sivaangi going to quit Cook with comali show

ஆனாலும் தனக்கு சிறப்பான பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். தற்போது குக்காக கலக்கி வருகிறார். இம்யூனிட்டி சேலஞ்ச்களிலும் சிறப்பான பர்பார்மென்சை கொடுத்து வருகிறார். தொடர்ந்து பாடகியாகவும் நடிகையாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவரை காண முடிகிறது. இதனிடையே, அடுத்தடுத்த ரீல்ஸ்களிலும் சிறப்பாக பங்கேற்று வருகிறார்.

இதனிடையே ரசிகர்களிடையே உரையாடிய ஷிவாங்கியிடம் அவரை மறுபடியும் எப்போது கோமாளியாக பார்க்க முடியும் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஷிவாங்கி, இந்த 4வது சீசன்தான் தன்னுடைய கடைசி சீசன் என்றும், அதனால் இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சிறப்பான பர்பார்மென்சை கொடுக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். கோமாளியாகவும் குக்காகவும் ரசிகர்களை கவர்ந்துவரும் ஷிவாங்கி இனிமேல் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற மாட்டார் என்ற செய்தி ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X