Don't Miss!
- Sports
2022ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்.. சூர்யகுமார் யாதவ்க்கு கிடைத்த கவுரவம்.. விவரம்
- News
குறிச்சு வச்சுக்கோங்க.. 2024 நாடாளுமன்றத் தேர்தல்.. எனது ஆட்டத்தைப் பாருங்கள்.. எச்சரிக்கும் சீமான்!
- Finance
3 நாட்களுக்கு பிறகு சரிந்த தங்கம் விலை.. நல்ல சான்ஸ் தான்.. மிஸ் பண்ணிட்டோமோ?
- Automobiles
கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா? இந்த விஷயங்களை செஞ்சா வலி இருந்த இடமே தெரியாம பறந்து போயிரும்
- Lifestyle
நீங்க நினைத்ததை விட எடையை வேகமாக குறைக்க இந்த பழங்கள் அல்லது காய்கறி சாறுகளில் ஒன்றை தினமும் குடித்தால் போதும்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
கோமாளியில் இருந்து குக்காக ப்ரமோஷன்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷிவாங்கி!
சென்னை : சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி என விஜய் டிவி நிகழ்ச்சிகளின்மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.
இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் அதிகமான பட வாய்ப்புகளையும் ஷிவாங்கிக்கு பெற்றுத் தந்துள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த சீசன்களை போலவே தற்போது துவங்கவுள்ள 4வது சீசனிலும் ஷிவாங்கி பங்கேற்கவுள்ளார்.
விரைவில்
வருவேன்..
பரதநாட்டியம்
போஸ்
கொடுத்து
ரசிகர்களை
கவர்ந்த
ஷிவாங்கி!

விஜய் டிவி நிகழ்ச்சிகள்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சிமூலம்தான் முதன்முதலில் ரசிகர்களை பொது வெளியில் சந்தித்தார் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியின்மூலம் இவர் தன்னுடைய வசீகர குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஷிவாங்கிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

ஷிவாங்கியின் லூட்டிகள்
இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சீசன்களில் இவர் அடித்த லூட்டிகள் ஏராளம். இரண்டாவது சீசனில் அஸ்வினை வைத்து செய்தார். அவருடன் இணைந்து காதல் கலாட்டாக்களில் ஈடுபட்ட ஷிவாங்கி, அடுத்த கோமாளி புகழுடன் இணைந்து அண்ணன் -தங்கை பாசத்தை காட்டினார். அடுத்தடுத்த இந்த காம்பினேஷன்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

முக்கியமான கோமாளி
மூன்றாவது சீசனிலும் மணிமேகலை, புகழ், சுனிதா என சக கோமாளிகள் மற்றும் குக்குகள், நடுவர்கள் என அனைவரிடமும் சிறப்பாக இணைந்து செயல்பட்டார். இவரது இனிமையான குரலால் அடுத்தடுத்த பாடல்களையும் இந்த நிகழ்ச்சியில் அரங்கேற்றினார். சில சமயங்களில் இந்த நிகழ்ச்சியின் முக்கியமான கோமாளியாக தன்னுடைய குக்கிற்கு வெற்றியையும் தேடித்தந்தார்.

ஜனவரி 28ல் துவக்கம்
இந்நிலையில் வரும் ஜனவரி 28ம் தேதி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் துவங்கவுள்ளதாக தற்போது புதிய ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. கல்யாண சமையல் சாதம் என நடுவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இந்த ப்ரமோவில் கும்பகர்ணன்களாக மாறியுள்ளனர். கோமாளிகளையும் ஆட்டுவிக்க காத்திருக்கின்றனர்.

குக்காக பிரமோஷன்
இதனிடையே ஷிவாங்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவினை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியான வதந்திகள் அனைத்தும் உண்மை என்று அவர் கூறியுள்ளார். தான் குக்காக இந்த சீசனில் ப்ரமோட் ஆகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். த்ரில்லிங்கான இந்த புதிய பயணத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிகமான பட வாய்ப்புகள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கியமான கோமாளிகளில் ஒருவராக ஷிவாங்கி உள்ளார். இந்த நிகழ்ச்சியே அவருக்கு டான், காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள், இசைக் கச்சேரிகள், பின்னணி பாடல்கள் என மிகவும் பிசியாக காணப்படுகிறார் ஷிவாங்கி