Sivaangi :பேட்மிண்டன்.. வொர்க்அவுட்.. யோகா.. சிவாங்கியின் எடைகுறைப்பு சீக்ரெட்ஸ்!

சென்னை : நடிகை சிவாங்கி, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கேமாளி நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்த நிகழ்ச்சிகள் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்து வருகிறது.

சிவகார்த்திகேயனுடன் டான், வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள நிலையில் அடுத்ததாக காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Actress Sivaangis weight loss program revealed and attracts her fans

சிவாங்கியின் எடை குறைப்பு சீக்ரெட்ஸ் :விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் சிவாங்கி. குறிப்பாக சூப்பர் சிங்கர்ஸ் சிவாங்கிக்கு அதிகமான படக்ளில் பின்னணி பாடும் வாய்ப்பையும் தனியாக ஆல்பம் பாடல்களை பாடும் வாய்ப்பைகளையும் பெற்றுத் தந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் இறுதிவரை செல்லவில்லை என்றபோதிலும் ரசிகர்களை மனதை கொள்ளைக் கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சிவாங்கி. கடந்த மூன்று சீசன்களில் இவர் கோமாளியாக வித்தியாசமான கெட்டப்புகள் மற்றும் தன்னுடைய செயல்பாடுகளால் நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக மாறியுள்ளார்.

அந்த வகையில் வித்தியாசமான டிஷ்களை சமைத்து சக போட்டியாளர்களையும் நடுவர்களையும் மட்டுமில்லாமல் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். அடுத்தடுத்த இம்யூனிட்டி ரவுண்ட்களிலும் வென்று தற்போது இந்த நிகழ்ச்சியின் முதல் பைனல் போட்டியாளராக மாறியுள்ளார். இந்நிலையில் குண்டாக இருந்த சிவாங்கி, அடுத்தடுத்த சிறப்பான செயல்பாடுகளால் 10 கிலோ வரை வெயிட் குறைத்து தற்போது ரசிகர்களை கவரும்வகையில் ஸ்லிம்மாகியுள்ளார்.

Actress Sivaangis weight loss program revealed and attracts her fans

இடையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிவாங்கி தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவர் பேட்மிண்டன் விளையாட்டை கையிலெடுத்துள்ளார். தினந்தோறும் இதை அவர் பிராக்டீஸ் செய்துள்ளார். மேலும் வீட்டிலேயே சின்ன சின்னதாக வொர்க் அவுட்சும் செய்த சிவாங்கி, யோவையும் முறைப்படி செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்ததாக கூறியுள்ளார். மேலும் ஸ்கிப்பிங்கும் அதிகளவில் செய்துள்ளார்.

தொடர்ந்து ஹோட்டல் உணவுகளை வாங்கி சாப்பிடுவதையும் அவர் தவிர்த்துள்ளார். மேலும் கிரீன் டீ, சர்க்கரை சேர்க்காத உணவுகள் மற்றும் பானங்கள், பச்சை காய்கறிகளையும் சிவாங்கி அதிகமாக எடுத்துக் கொண்டுள்ளார். இதுபோன்ற தொடர் செயல்பாடுகளால் அவரால் தொடர்ந்து தன்னுடைய உடல்நலனில் அக்கறை செலுத்த முடிந்ததுடன் உடல் எடையையும் கணிசமாக குறைக்க முடிந்துள்ளது. அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X