திருமணம் குறித்த கேள்வி... வெட்கத்துடன் பதிலளித்த சிவாங்கி... ஆனா அவங்க சொன்ன பதில்ல தான் ட்விஸ்ட்!

சென்னை : டான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக மாறியுள்ளார் சிவாங்கி. முன்னதாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். மேலும் பட படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.

Recommended Video

இந்த படத்துக்கு DON-னு ஏன் பேர் வச்சாங்க தெரியுமா Sivakarthikeyan Super Speech at Don press Meet

நடிகை சிவாங்கி

நடிகை சிவாங்கி

சிவாங்கி விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக காணப்படுகிறார். சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமான இவர், ஏராளமான ரசிகர்களை பெற்ற நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டியெல்லாம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களில் பங்கேற்று கலக்கி வருகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. நடிகர் அஸ்வினுடன் இணைந்து இவர் செய்த சேட்டைகளை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். இதேபோல தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்று தன்னுடைய கோமாளித்தனத்தால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

டான் படத்தில் வாய்ப்பு

டான் படத்தில் வாய்ப்பு

இந்த நிகழ்ச்சி மூலமே சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. படத்தில் பிரியங்கா மோகனின் தோழியாக வரும் ஷிவாங்கிக்கு சிவகார்த்திகேயனுடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகள் உள்ளது. சிவகார்த்திகேயன் மீது தனக்கு கிரேஸ் என்பதற்கு இவர் கொடுக்கும் விளக்கம் சிறப்பாக காணப்படுகிறது.

பிடித்த விஜய்யின் 3 படங்கள்

பிடித்த விஜய்யின் 3 படங்கள்

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேசியுள்ள ஷிவாங்கி, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். தனக்கு பிடித்தமான விஜய்யின் மூன்று படங்கள் மெர்சல், பிகில் மற்றும் சர்க்கார் என்று தெரிவித்துள்ளார் ஷிவாங்கி. தன்னை இன்ஸ்டாகிராமில் 4.6 மில்லியன் பேர் பாலோ செய்வதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 திருமணம் குறித்த கேள்வி

திருமணம் குறித்த கேள்வி

தொடர்ந்து அவரிடம் அவருடைய கணவர் குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, தனக்கு 22 வயதுதான் ஆவதாகவும், இப்போதே இதுகுறித்து கேட்டால் என்ன செய்வது என்று வெட்கப்பட்டுக் கொண்டே எதிர்கேள்வி கேட்டார். ஆனால் இதுகுறித்து 8 வருடம் கழித்து தெரிந்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

சிறப்பான பாடல்கள்

குழந்தைத்தனமாக காணப்படும் ஷிவாங்கி பாடல்கள் பாடும்போது மிகவும் முதிர்ச்சியான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார். இவரது குரலில் இவர் பாடியுள்ள பாடல்கள், ஆல்பம் பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. தொடர்ந்து ட்ரெண்டிங்கிலும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X