Sivakarthikeyan: என்னோட வொய்ஃப்தான் அதுக்கு காரணம்.. அவங்க இல்லன்னா.. சிவகார்த்திகேயன் ஓபன்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான இயக்குநர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களங்களிலும் தன்னை இணைத்துவரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தஅக்டோபர் 31ம் தேதி வெளியானது அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து வெளியானது.

மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்காக உருவாகி கமல்ஹாசனின் தயாரிப்பில் ரிலீசான அமரன் படம் சர்வதேச அளவில் 300 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளது. விரைவில் ஓடிடியிலும் வெளியாகவுள்ள இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

sivakarthikeyan amaran movie aarthi

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட்கேரக்டர்களில் நடித்து கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான அமரன் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் 300 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ள நிலையில் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளனர். படத்தின் வெற்றி விழாவையும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், படத்தின் ரிலீசை தாண்டி அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

சினிமாவிலிருந்து விலக முடிவு: தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும் அவர் பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும் அவர் வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே தன்னுடைய குடும்பம், மனைவி ஆர்த்தி குறித்தும் தன்னுடைய நெகிழ்ச்சியை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியுள்ளார். சினிமாவில் அடுத்தடுத்த சவால்களை சந்தித்து வருவதாகவும் எங்கிருந்து யார் தாக்குவார்கள் என்ற நிலைதான் சினிமாவில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தான் சினிமாவைவிட்டே விலக நினைத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்த்தி கொடுத்த அட்வைஸ்: இந்த எண்ணம் வந்தபோது இதுகுறித்து தன்னுடைய மனைவி ஆர்த்தியிடம்தான் தான் கூறியதாகவும் அதற்கு அவர் தன்னை சமாதானப்படுத்தி தான் நேசிக்கும் சினிமாவைவிட்டு விலகக்கூடாது என்று கூறியதாகவும் அதனால்தான் தான் தொடர்ந்து சினிமாவில் இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில்தான் இவருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. முன்னதாக சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவியை பிரியவுள்ளதாக தகவ்லகள் வெளியாகின.

அடுத்தடுத்த படங்கள்: ஆனால் இவர்களுக்கு மூன்றாவதாக குழந்தை பிறந்தவுடன் அந்த பேச்சுக்கள் அனைத்தும் அப்படியே அடங்கிப் போனது. தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குநர்களுடன் இணைந்து சிறப்பான படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார் சிவகார்த்திகேயன். அமரன் படத்தை அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய நடிப்பு மற்றும் தயாரிப்பில் சிபி சக்ரவர்த்தியுடன் இணையவுள்ளார். இதையடுதது சுதா கொங்கராவுடன் புறநானூறு படத்திலும் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X