காசு கொடுத்துதானே வாங்கறேன்னு பொங்கிய நடிகை.. யாருக்கா இருந்தாலும் கோபம் வரும்ல
சென்னை: முன்னணி நடிகை ஒருவர் பிரபல ஆடை நிறுவனத்தின் சேவையால் கடும் அதிருப்தி அடைந்த சம்பவம், தற்போது சினிமா வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிராண்டாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை கொடுக்க வேண்டாமா என ரசிகர்களும் அந்த நிறுவனத்தை விமர்சித்து வருகின்றனர்.
சம்பவம் என்னவென்றால், அந்த நடிகை சமீபத்தில் பிரபல ஆடை நிறுவனத்தின் இணையதளம் மூலம் சில ஆடைகளை ஹோம் டெலிவரிக்கு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், வீட்டுக்கு வந்த ஆடைகளை திறந்து பார்த்ததும் கடும் அதிர்ச்சி காத்திருந்ததாம். புதிய ஆடைகளில் இருக்க வேண்டிய புத்துணர்ச்சியான வாசனைக்கு பதிலாக, உடல் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.
ஒருமுறை நடந்திருந்தால் பரவாயில்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக இதே அனுபவம் ஏற்பட்டதால், இனியும் அமைதியாக இருந்தால் சரியாகாது என்று முடிவு செய்த நடிகை, நேரடியாக அந்த நிறுவனத்தையே சமூக வலைதளத்தில் டேக் செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். "குறைந்தபட்சம் ஆடைகளை பேக் செய்வதற்கு முன்பாவது சரியாக பரிசோதனை செய்து அனுப்புங்கள். இப்படிப்பட்ட அனுபவம் உண்மையிலேயே அருவருப்பாக இருக்கிறது" என்ற வகையில் அவர் பதிவிட்டிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாக்கான நடிகை: இந்த பதிவு வெளியானதும், "புதிய டிரஸ்ஸில் எப்படி உடல் துர்நாற்றம் வரும்?", "ஏற்கனவே யாரோ பயன்படுத்திய ஆடையை மீண்டும் பேக் செய்து அனுப்புகிறார்களா?", "இவ்வளவு பெரிய நிறுவனத்தில் தரக் கட்டுப்பாடு இல்லையா?" என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர், "எங்களுக்கும் இதே மாதிரி அனுபவம் ஏற்பட்டிருக்கிறது" என்றும் கருத்து பதிவிட்டு வருவது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
சாதாரண வாடிக்கையாளராக: வழக்கமாக சினிமா, படப்பிடிப்பு, கிளாமர் புகைப்படங்கள் என ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அந்த நடிகை, இந்த முறை ஒரு சாதாரண வாடிக்கையாளராக தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் என்ன பதில் சொல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications