புன்னகையரசிக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் சினேகா!
சென்னை : தொடர் வெற்றித் திரைப்படங்களில் மூலம் இன்று வரை சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சினேகா.
Recommended Video
விரும்புகிறேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்த சினேகாவுக்கு அந்தத் திரைப்படம் வெளியாக தாமதமானதால் மாதவனுடன் இணைந்து நடித்த என்னவளே இவருக்கு அறிமுக திரைப்படமானது.
குடும்பப்பாங்கான மற்றும் காதல் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட சினேகா இன்றுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில், புன்னகை அரசி அக்டோபர் 12 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கச்சிதமாக பொருந்தக்கூடிய
எந்தக் கதாபாத்திரம் நடித்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக்கூடிய வெகு சில நடிகைகளில் நடிகை சினேகாவும் ஒருவர். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பட்டையைக் கிளப்பிய இவர் தமிழ் சினிமாவுக்கு "என்னவளே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார்.

நடிக்க தயங்கும் வேடத்தில்
குடும்பப்பாங்கான மற்றும் காதல் திரைப்படங்களில் நடித்து வந்த சினேகாவுக்கு தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைய இவருக்காக தனி ரசிகர் கூட்டமே உருவானது. ஆனந்தம், ஏப்ரல் மாதத்தில், வசூல்ராஜா எம்பிபிஎஸ், காதல் சுகமானது, வசீகரா, ஆட்டோகிராப், உன்னை நினைத்து என தமிழில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டையில் அதுவரை பலரும் கண்டிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் பல கதாநாயகிகள் நடிக்க தயங்கும் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

பட்டாஸ்
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப் பிரபலமாக இருந்த சினேகா புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் தனுஷுடன் இணைந்து " பட்டாஸ்" திரைப்படத்தில் அனைவரையும் அசர வைக்கும் கதாபாத்திரத்தில் வந்து அசத்தி இருந்தார்.

பிறந்தநாள்
இப்போது மணிரத்னம் தயாரித்து வரும் அந்தொலஜி திரைப்படமான "நவரசா " மற்றும் துல்கர் சல்மான் நடிக்கும் " வான்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் சினேகா இன்று வரை சிறந்த நடிகையாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்து வரும் நிலையில் அக்டோபர் 12 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











