இரண்டாவது குழந்தை.. மீண்டும் அம்மாவாகும் பிரபல நடிகை.. ரகசியமாக நடந்த குடும்ப விழா!
Recommended Video
சென்னை: நடிகை சினேகா தற்போது இரண்டாவது குழந்தை பிறப்பதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார். நேற்றுதான் இவரின் வீட்டில் சீமந்தம் நடந்துள்ளது.
2000ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை சினேகா. இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
முக்கியமாக கமல், விக்ரம், அஜித், சூர்யா, விஜய் ஆகிய முக்கிய நடிகர்கள் உடன் நடிகை சினேகா நடித்துள்ளார். அதேபோல் நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தார்.

என்ன படம்
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் காதலித்தனர். அதன்பின் இவர்கள் 2012ல் திருமணம் செய்து கொண்டனர். இதன் பின் இவர் சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

என்ன குழந்தை
இந்த நிலையில் 2015ல் நடிகை சினேகாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு விஹான் என்று பெயர் வைக்கப்பட்டது. விஹானின் புகைப்படத்தை அடிக்கடி நடிகை சினேகா டிவிட்டரில் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவார்.

யார்
இந்த நிலையில் நடிகை சினேகா தற்போது இரண்டாவது குழந்தை பிறப்பதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார். நேற்றுதான் இவரின் வீட்டில் சீமந்தம் நடந்துள்ளது. மிகவும் ரகசியமாக, பெரிய அளவில் உறவினர்களை அழைக்காமல் இந்த விழா நடந்துள்ளது. தற்போது இவர் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா பிரேக்
இதனால் அவர் மீண்டும் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார். முதல் குழந்தை பிறந்த பின் இவர் சில படங்களில் நடித்தார். தற்போது குழந்தை பிறந்து வளரும் வரை மீண்டும் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











