நடிகை சினேகாவுக்கு குழந்தை பிறந்துடுச்சு.. என்ன குழந்தைன்னு பாருங்க.. டபுள் சந்தோஷத்தில் பிரசன்னா!

Recommended Video

Sneha Blessed with Girl Baby | Prasanna | Aranthagi Nisha

சென்னை: நடிகை சினேகா இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மலையாளப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதனை தொடர்ந்து விரும்புகிறேன் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.

ஆனால் அந்த படம் மிகவும் தாமதமாக ரிலீஸானது. அதற்கு முன்பே மாதவனுடன் சேர்ந்து நடித்த என்னவளே படம் ரிலீஸானது.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை சினேகா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் நடிகை சினேகா. அண்மையில் வெளியான பட்டாஸ் படத்திலும் சினேகா நடித்திருக்கிறார். கன்னியாகுமரி கதாப்பாத்திரத்தில் அவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காதல்.. திருமணம்

காதல்.. திருமணம்

நடிகை சினேகா‘அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

மீண்டும் கர்ப்பம்

மீண்டும் கர்ப்பம்

விஹான் என பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது 4 வயதாகிறது. இந்நிலையில் நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது.

பெண் குழந்தை

பெண் குழந்தை

இந்நிலையில் பிரசவ காலம் நெருங்கியதை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சினேகா. அவருக்கு நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த தகவல் நடிகர் பிரசன்னாவுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் நடிகர் பிரசன்னா மருத்துவமனைக்கு விரைந்து வந்து மனைவியையும், குழந்தையையும் பார்த்து மகிழ்ந்தார்.

தை மகள் வந்தாள்

பின்னர் மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சினேகாவும், அவருடைய குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தை மகள் வந்தாள் என்று தனக்கு மகள் பிறந்துள்ளதை பிரசன்னா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பிரசன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிஞ்சு பூமகள்

பிரசன்னாவின் டிவிட்டை பார்த்த இந்த ரசிகர்
வாழ்த்துகள் பிரசன்னா, சினேகா.. உங்கள் குடும்ப வாழ்கையில் மேலும் பல பல மகிழ்ச்சி தந்து இன்பம் சேர்ப்பாள்.. தை மாதத்தில் உங்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்த மகள்..அவள் மழலை பிஞ்சு பூமகள்.உங்கள் இல்லத்தின் அதிர்ஷ்டமகள் என்று வாழ்த்து கூறியிருக்கிறார்.

இந்த ரசிகர் தாயும் சேய்யும் நலம் பெற இறைவனை பிரார்த்தித்து..! மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்!! என தெரிவித்துள்ளார். கர்ப்பத்துடனேயே ‘பட்டாஸ்' படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார். அதில சினேகா அடிமுறை கலையை பயன்படுத்தி காவலர்களுடன் சண்டை போடும் காட்சி பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய பெண்குழந்தைகள் தினமான நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X