அப்பாவும் மகனும் ஒரே மாதிரி உடையில் யோயோ போஸ்.. குட்டி பாப்பா உடன் சினேகா.. வைரலாகும் பிக்ஸ் !

சென்னை : தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

பிரசன்னா சினேகா தம்பதிக்கு ஏற்கனவே விஹான் என்ற ஆண் குழந்தை இருக்கின்ற நிலையில் இவர்களுக்கு பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கு ஆத்யன்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் நடந்த காதணி விழா விசேஷத்தில் விஹான் மற்றும் பிரசன்னா இருவரும் சேர்ந்து ஒரே ஆடையில் ஒரே மாதிரி போஸ் கொடுத்த புகைப்படம், மற்றும் சினேகா உடன் மொட்ட பாப்பா இருக்கும் க்யூட் புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகிறது.

வில்லன் கதாபாத்திரத்தில்

வில்லன் கதாபாத்திரத்தில்

அனைவரும் விரும்பும் நட்சத்திர ஜோடியாக கோலிவுட்டில் வலம் வரும் பிரசன்னா சினேகா திருமணத்திற்குப் பிறகும் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்து வர பிரசன்னா சமீபத்தில் வெளியான மாஃபியா திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

சண்டைக்காட்சிகளில்

சண்டைக்காட்சிகளில்

நடிகர் தனுஷ் இரண்டு வேடங்களில் பட்டையை கிளப்பிய பட்டாஸ் திரைப்படத்தில் சினேகா இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும், பல சண்டைக்காட்சிகளில் அவரையும் வாய்பிளக்கவும் வைத்திருந்தார்.

விஹான் என்ற மகன்

விஹான் என்ற மகன்

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த நட்சத்திர ஜோடி இப்பொழுது சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே விஹான் என்ற மகன் இருக்க அவனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வந்தனர்.

மாதிரி ஆடை

மாதிரி ஆடை

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்த ஜோடிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது, அந்த குழந்தைக்கு ஆத்யன்டா என பெயரிடப்பட்ட நிலையில் இப்பொழுது வீட்டில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற காதணி விழாவில் பிரசன்னா மற்றும் அவரது மகன் விஹான் இருவரும் ஒரே மாதிரி ஆடை அணிந்து செம ஜோராக யோயோ போஸ் கொடுத்துக்கொண்டு ஜாலியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சினேகா பதிவிட்டதை அடுத்து இப்போது வைரலாகி வருகிறது.

மடியில் வைத்து

மடியில் வைத்து

குட்டி பாப்பா ஆத்யன்டாவுக்கு மொட்டை அடித்து காது குத்தி இருக்க அவளை மடியில் வைத்துக் கொண்டவாறு சினேகா வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படங்களும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்று வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: sneha சினேகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X