பட்டுப்புடவையில் ஜொலிக்கும் சினேகா… அழகூரில் பூத்தவளே என வர்ணிக்கும் ரசிகர்கள் !

சென்னை : பட்டுப்புடவையில் பளபளனு ஜொலிக்கும் சினேகாவின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகும் சினேகா அழகு குறையாமல் அழகு பதுமையாக வலம் வருகிறார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

இவர் துல்கர் சல்மான், பிரியா பவானி சங்கர் நடிக்கும் வான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், விடியல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

என்னவளே

என்னவளே

என்னவளே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சினேகா. இதையடுத்து, மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடல் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் சிறந்த நடிகைக்கான விருதை இவருக்கு பெற்று தந்தது.

70க்கும் மேற்பட்ட படங்கள்

70க்கும் மேற்பட்ட படங்கள்

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பார்த்திபன், கனவு, ஆட்டோ கிராப், ஏய் நீ ரொம்ப அழக இருக்கே,கிங், பம்மல் கே சம்மந்தம், வசீகரா என சுமார் 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

பிரசன்னாவுடன் காதல்

பிரசன்னாவுடன் காதல்

கமல், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தார். பின்னர் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.

Recommended Video

Actress Sneha shocking post reason behind | நாங்க Husband & Wife இல்ல! Anwar Sameera
அழகூரில் பூத்தவளே

அழகூரில் பூத்தவளே

இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக தனுஷூடன் பட்டாசு படத்தில் நடித்தார். தற்போது இவர், பச்சை நிற பட்டுப்புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். புன்னகை அரசியின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை அழகூரில் பூத்தவளே என்று பாட்டுப்பாடி வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X