பண்ணையார் மகளாக சினேகா..!
பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடிகை சினேகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
மேஜிக் பாக்ஸ் நிறுவனம் சார்பில் எம்ஆர் கணேஷ் தயாரிக்க, அருண்குமார் இயக்கும் படம் பண்ணையாரும் பத்மினியும்.
இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஐஸ்வர்யா, நீலிமா போன்றவர்கள் நடிக்கின்றனர்.
ஒரு பண்ணையார் தன் பிரிமியர் பத்மினி கார் மீது வைத்திருக்கும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பப்படும் இந்தப் படத்தில் பண்ணையார் வேடத்தில் நடிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்தப் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்க சினேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பண்ணையாரின் மகளாக இதில் நடிக்கிறார் சினேகா.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சினேகாவுக்கு, கதாநாயகிக்கு நிகரான வேடம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












