வாழ்க்கை ரொம்ப அழகானது.. அதை பாருங்க.. ஸ்நேகா சொன்ன கருத்து!

சென்னை : நடிகை ஸ்நேகா தொடர்ந்து பல ஆண்டுகளாக பிசியான நடிகையாக தமிழில் காணப்படுகிறார்.

நடிகர் பிரசன்னாவுடன் ஸ்நேகாவிற்கு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையிலும் தேர்ந்தெடுத்த படங்களில் அவரை காண முடிகிறது.

இதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஸ்நேகா.

நடிகை ஸ்நேகா

நடிகை ஸ்நேகா

நடிகை ஸ்நேகா தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்து வருபவர். விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார்.

மம்முட்டியுடன் கமிட்டான ஸ்நேகா

மம்முட்டியுடன் கமிட்டான ஸ்நேகா

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் அமலா பாலும் சிநேகாவுடன் இணைந்து நடிக்கவுள்ளனர். தன்னுடைய இளமையையும் அழகையும் தொடர்ந்து சிறப்பாக மெயின்டெய்ன் செய்து வருகிறார் ஸ்நேகா.

ஸ்நேகா -பிரசன்னா ஜோடி

ஸ்நேகா -பிரசன்னா ஜோடி

பிரசன்னாவுடன் ஸ்நேகாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் பிரியவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தங்களது அடுத்தடுத்த ரொமான்டிக் புகைப்படங்கள் மற்றும் பயணங்களின் வீடியோக்கள் மூலம் அதை பொய்யென இருவரும் நிரூபித்துள்ளனர். இருவரும் தங்களது கேரியரில் சிறப்பான வெற்றியையும் கொடுத்து வருகின்றனர்.

அடுத்தடுத்த பதிவுகள்

அடுத்தடுத்த பதிவுகள்

இதனிடையே சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஸ்நேகா. அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து பதிவிட்டு வருகிறார் ஸ்நேகா. இந்தப் புகைப்படங்களில் அழகு அள்ளுகிறது தொடர்ந்து ரசிகர்களின் லைக்சும் அள்ளுகிறது.

வாழ்க்கை அழகானது

வாழ்க்கை அழகானது


தற்போது பிங்க் மற்றும் வெள்ளை நிற மாடர்ன் அவுட்பிட்டில் மிகவும் சிறப்பான புகைப்படங்களை எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்நேகா. மேலும் வாழ்க்கை முழுக்க முழுக்க அழகானது என்றும் அதை கவனியுங்கள் என்றும் தன்னுடைய கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

காதலர் தின பதிவு

காதலர் தின பதிவு

சமீபத்தில் காதலர் தினத்தையொட்டி தன்னுடைய கணவர் பிரசன்னாவுடனான அடுத்தடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் ஸ்நேகா. பிரசன்னாவும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து, அவள் என்னுடையவள் மட்டுமல்ல என்றும் என்னுடைய இல்லம், என்னுடைய இதயம் என்னுடைய அனைத்தும் அவள்தான் என்றும் கூறி, காதலர் தின வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X