ஆன்லைன் மோசடி.. பிரபல நடிகை உறவினர் பரிதவிப்பு.. லாக் டவுனை பயன்படுத்தி காசு பார்த்த கும்பல்!

சென்னை: சிம்புவின் வானம் படத்தில் நடித்த நடிகை சினேகா உல்லால், தனது உறவினர் ஆன்லைன் மோசடியில் சிக்கியது குறித்து பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Doordarshan Re telecasts Shaktimaan and Ramayana

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் சினேகா உல்லால், தனது உறவினர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

Actress Sneha Ullal relation met with an online fraud

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆன்லைனில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க ஆர்டர் செய்துள்ளார் சினேகா உல்லாலின் உறவினர்.

லாக் டவுனை பயன்படுத்திக் கொண்ட ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று, கடையில் சரக்கு தீர்ந்து விட்டது என்றும், குடோனில் இருந்து எடுத்து வருகிறோம், முன்னதாக பணம் செலுத்தினால் மட்டுமே குடோனில் சரக்கு எடுக்க முடியும் எனக் கூற, அதை நம்பி ஏமாந்த அவர், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைனில் செலுத்தி உள்ளார்.

Actress Sneha Ullal relation met with an online fraud

ஆனால், சினேகா உல்லால் தங்கி இருக்கும் வீட்டுக்கு பொருட்கள் வந்து சேராத நிலையில், இதுகுறித்த சந்தேகம் அடைந்து விசாரித்த போது, மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் ஷேர் செய்த சினேகா உல்லால், யாரும் ஆன்லைன் ஷாப்பிங்கை பயன்படுத்த வேண்டாம் என்றும், இதுபோன்ற மோசடிகள் நடப்பதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஆன்லைன் மோசடிகள் எப்படி நடக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக படமாக்கி இருப்பார்கள். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் தான் அவர்களால் ஈஸியாக பணம் பறிக்க முடியும், பொதுமக்கள் அதனை உணர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X