எல்லாமே எக்குத்தப்பான போஸ்.. விளம்பரமா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? ட்ரெண்டாகும் சோபிதா வீடியோ!
ஹைதராபாத்: இணையத்திற்குள் நுழைந்தாலே டன் கணக்கில் கொட்டும் செய்தியாக இருப்பது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயத்தார்த்த செய்திகளாக இருக்கின்றது. சோபிதா துலிபாலாவுக்கு இது முதல் திருமணம், ஆனால் நாக சைதன்யாவுக்கோ இது இரண்டாவது திருமணம். இவர் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். அதன் பின்னர் 2021ஆம் ஆண்டில் இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இப்படியான நிலையில், நாக சைதன்யா 2022ஆம் ஆண்டில் இருந்து சோபிதாவுடன் டேட் செய்து வருவதாக தகவல்கள் கசிந்தது.
அதையடுத்து இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் என பேசப்பட்டது. அதேபோல் நேற்று அதாவது ஆகஸ்ட் 8ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

டோலிவுட் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா வட்டாரங்களில் இவர்களது நிச்சயதார்த்த பேச்சுகள்தான் ஓடிக்கொண்டு உள்ளது. இப்படியான நிலையில், சோபிதா துலிபாலா யார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. குறிப்பாக தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோபிதா அதன் பின்னர் வேறு எந்த படங்களும் அவரது நடிப்பில் இதுவரை வெளிவரவில்லை. இப்படியான நிலையில், சோபிதாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

காண்டம் விளம்பரம்: அதாவது காண்டம் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ள சோபிதா அந்த வீடியோவில், ஆபாச பட நடிகைகளைப் போல் எக்குத்தப்பான போஸ்களைக் கொடுத்துள்ளார். இந்த விளம்பரத்தில் ரன்பீர் சிங்குடன் அவர் நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த விளம்பரம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகியுள்ளது. அந்த விளம்பரத்தில் சோபிதா துலிபாலாவின் போர்ஷனை மட்டும் வெட்டி தற்போது இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

சினிமா வாழ்க்கை: சோபிதா துலிபாலாவைப் பொறுத்தவரை, ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். சோபிதா துலிபாலா, கடந்த 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்றார். மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்த சோபிதா துலிபாலா அதன் பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ராமன் ராகவ் 2.o என்ற இந்தி படத்தில் நடித்து, திரை உலகில் அறிமுகமானார். 2016ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நவசுதீன் சித்திக் உடன் நடித்தார். இங்கிருந்து தொடங்கிய அவரது திரைப்பயணம், இப்போது இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகின்றார்.

வெப் சீரிஸ்: தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் தமிழ் படம் இதுதான். படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்களிலும் சோபிதா துலிபாலா நடித்து வருகின்றார். குறிப்பாக நைட் மேனேஜர் வெப் சீரீஸ் ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











