பொன்னியின் செல்வனில் இணைந்த இன்னொரு ஹீரோயின்... இவருக்கு என்ன கேரக்டரா இருக்கும்?

By

Recommended Video

Aishwarya Rajesh revealed why she is not acting in Ponniyin Selvan

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் நடனக் கலைஞரும் நடிகையுமான இன்னொரு ஹீரோயின் இணைந்துள்ளார்.

கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் படம் உருவாகிறது.

பாகுபலி போல இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

ஆதித்த கரிகாலனாக

ஆதித்த கரிகாலனாக

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நந்தினியாக, ஐஸ்வர்யா ராயும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் சின்ன பழுவேட்டைரையராக ரகுமானும் ஆதித்த கரிகாலனாக விக்ரமும் வந்தியத் தேவனாக கார்த்தியும் குந்தவையாக, த்ரிஷாவும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஐதராபாத்தில்

ஐதராபாத்தில்

இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். இந்நிலையில், படக்குழு ஷூட்டிங்கை முடித்துவிட்டு பொங்கலுக்கு முன் சென்னைத் திரும்பியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இன்னொரு நடிகை

இன்னொரு நடிகை

இங்கு ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக, ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் ரியாஸ் கான் சமீபத்தில் இணைந்தார். இப்போது இன்னொரு நடிகையும் இணைந்துள்ளார். அவர் ஷோபிதா துலிபாலா.

இளவரசி கேரக்டரில்

இளவரசி கேரக்டரில்

பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன கலைஞரான இவர், அனுராக் காஷ்யப் இயக்கிய ராமன் ராகவ் 2.0 படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் கூடாச்சாரி, மலையாளத்தில் மூதோன், உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது ராகவா லாரன்ஸ் இந்தியில் இயக்கும் லக்‌ஷ்மி பாம்ப் படத்திலும் நடித்து வருகிறார். இவர் பொன்னியின் செல்வனில் இளவரசி கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X