மேடையில் நடிகையை தலையில் தட்டிய நாக சைதன்யா வருங்கால மனைவி.. ஒரே பேஜாராபோச்சு!

சென்னை: தமிழ் சினிமா உலகில் கடந்த பல தசாப்தங்களாகவே இருந்த கதை என்றால் அது பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பதுதான். எம்.ஜி.ஆர் தொடங்கி, கமல் வரை பலரும் முயற்சி செய்து கடைசியில் மணிரத்னம் இயக்கினார். படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியானது. படத்தினை லைகா நிறுவனம் தயாரித்தது. படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப் படமாக மாறியது. அதேநேரத்தில் படம் வெளிமாநிலங்களில் பெரிய அளவில் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகவில்லை. இதனால் படம் வசூலில் சரிவினைச் சந்தித்தது.

அதேபோல் படத்தினை இந்தி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்க்கவும், அங்கு மார்கெட்டிங் செய்யவும் நடிகை ஐஸ்வர்யாவை படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர். ஆனாலும் ஐஸ்வர்யாவின் ஜோடியாக சரத்குமார் நடித்ததால் இந்தி ஆடியன்ஸ் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆனால் படத்தினை மாபெரும் பொருட்செலவில் தயாரித்த லைகா நிறுவனத்தினை ஒட்டுமொத்த திரையுலகமுமே பாராட்டியது.

sobhita dhulipala aishwarya lekshmi vikram

பொன்னியின் செல்வன்: ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா, பிரபு, நாசர், விக்ரம் பிரபு, ரஹ்மான், சரத்குமார், பார்த்திபன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். மிகப்பெரிய நாவலை எப்படி இரண்டு பாகங்களில் படமாக கொடுக்கப்போகின்றார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் இயக்குநர் மணி ரத்னம் படத்தினை கச்சிதமாக முடித்து அசத்தினார். படம் தேசிய விருதுக்கும் தகுதி பெற்றது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் மட்டும் மொத்தம் நான்கு தேசிய விருதுகளை வென்றது.

sobhita dhulipala aishwarya lekshmi vikram

புரோமோசன்: படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்தார். படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. அதேபோல் படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்தார். இவரது கேமரா ஒர்க் பெரும் பாராட்டினைப் பெற்றது. மேலும் படத்தின் புரோமோசனின்போது ஒட்டுமொத்த படக்குழுவும் தங்களது கதாபாத்திரங்களின் பெயரை தங்களது சமூக வலைதளங்களின் பெயராக மாற்றினார்கள்.

sobhita dhulipala aishwarya lekshmi vikram

தலையில் தட்டி: இப்படியான நிலையில் படத்தின் புரோமோசனின்போது நடிகை ஐஸ்வர்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா ஆகியோரது செயல் இப்போது இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக முடி வளர்த்திருந்தார். இந்நிலையில் படத்தின் புரோமோசனின்போது படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா விக்ரம்மின் முடியை, லேசாக இழுத்துப் பார்த்தார். இதனைப் பார்த்த நடிகை சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யாவின் தலையிலேயே தட்டி செல்லமாக அதட்டினார். இப்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X