படுக்க வர்றீயான்னு கேட்குறாங்க.. உங்க வீட்லேயும் பொம்பளைங்க இருக்காங்க.. நடிகை சோனா ஆவேசம்!

சென்னை: சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்கள் பதிவிடப்படுவதாக நடிகை சோனா குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

நீங்க Vaccine போட்டாச்சா ? | Actress Sona | Filmibeat Tamil

பிரபல நடிகை சோனா. தமிழில் பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சோனா. கடைசியாக சேஸிங் படத்தில் நடித்திருந்தார் சோனா.

கருத்தம்மா ராஜஸ்ரீ

கருத்தம்மா ராஜஸ்ரீ

தற்போது சிவப்பு மனிதர்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார் சோனா. அறிமுக இயக்குநர் அன்பு சரவணன் இயக்கும் இந்தப் படத்தை பி.டி.அரசகுமார் தயாரிக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், மீனாட்சி சர்க்கார், அனுகிருஷ்ணா, 'கருத்தம்மா' ராஜஸ்ரீ, ராஜசிம்மன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

வக்கீலாக வனிதா

வக்கீலாக வனிதா

மேலும் நடிகர் லிவிங்ஸ்டன் மற்றும் நடிகை வனிதா விஜயகுமாரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இருவரும் வக்கீல் உடையில் இருக்கும் காட்சிகள் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியானது.

சோனா பிரஸ் மீட்

சோனா பிரஸ் மீட்

மேலும் சோனாவும் வனிதாவும் படப்பிடிப்பு தளத்தில் இணைந்து எடுத்த போட்டோக்களும் வைரலானது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை சோனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

தனிப்பட்ட தாக்குதல்

தனிப்பட்ட தாக்குதல்

அப்போது பேசிய அவர், சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துக்கள் பகிரப்படுவதாக கூறினார். சினிமாவை தாண்டியும் ஆர்ட்டிஸ்ட்டுகளை தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவும் கூறினார் சோனா.

படுக்க வர்றீயா..

படுக்க வர்றீயா..

படத்தைப் பற்றியும் படத்தில் இடம்பெறும் கேரக்டர் பற்றியும் விமர்சிக்கலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் பர்சனல் அட்டாக் செய்யக்கூடாது. படுக்க வர்றியா என்றெல்லாம் கேட்கிறார்கள். அந்த மாதிரி விஷயங்கள் ரொம்ப அருவருப்பா இருக்கு என்றும் வேதனைப்பட்டார் சோனா.

பொம்பளைங்க இருக்காங்க

பொம்பளைங்க இருக்காங்க

உங்க வீட்டுலேயும் பொம்பளைங்க இருக்காங்க.. இதுமாதிரி பேசுறவங்க இனிமே திருந்துவாங்க என்று நம்புகிறேன் என்றும் கூறினார் சோனா. மேலும் சிவப்பு மனிதர்கள் படத்தில் முன்பு கூறப்பட்டது போல் சில்க் ஸ்மிதா ரோல் இல்லை. என்னுடைய கேரக்டருக்கு நிறைய எமோஷனல்ஸ் இருக்கும் என்றும் கூறினார்.

தடுப்பூசி போட்டுவிட்டேன்

தடுப்பூசி போட்டுவிட்டேன்

மேலும் முதல் லாக்டவுனில் தனக்கு பயமில்லை என்றும்
இரண்டாவது லாக்டவுனில் தனக்கு தெரிந்த பலரும் பாதிக்கப்பட்டதால் பயமாக இருந்தது என்றும் கூறினார். தான் தடுப்பூசி போட்டு கொண்டதாகவும் கூறினார் சோனா.
பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருவதாகவும் கூறினார் சோனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X