Actress Sona: எல்லாரும் தப்பா பாக்குறாங்க.. கல்யாணம் பண்ணிக்க முடியல.. மனம் வருந்திய நடிகை சோனா!

சென்னை: கவர்ச்சி நடிகை என்பதால் என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியவில்லை என்று நடிகை சோனா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை சோனாவை தெரியாத இளசுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குதூகலமாக வைத்திருந்தார்.

Actress Sona gave an emotional interview that she is not married because she is a glamorous actress

தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சோனா, சில ஆண்டுகள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்தார்.

கவர்ச்சி நடிகை சேனா: நடிகை சோனா இயக்குநர் சாமி இயக்கத்தில் வெளியான, மிருகம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். இதையடுத்து அழைப்பிதழ், அழகர் மலை, பத்து பத்து, லவ்ஸ், சோக்காளி, சோ, குசேலன் போன்ற படங்களில் நடித்துள்ளார். குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானார்.

ஸ்மோக் வெப் தொடர்: பட வாய்ப்பு இல்லாததால், சின்னத்திரை பக்கம் வந்த சோனா,மாரி, அபிடெய்லர் மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தார். தற்போது இவர், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து திரைக்கதை எழுதி ஸ்மோக் என்ற வெப் தொடரை இயக்குகிறார்.

கல்யாணம் பண்ணிக்க முடியல: நடிகை சோனா அண்மையில் அளித்துள்ள பேட்டியில், நான் கவர்ச்சி நடிகை என்பதால், என்னால் திருமணம் செய்து கொள்ளமுடியவில்லை, நான் நினைத்து இருந்தால் திருமணம் செய்து இருக்கலாம் ஆனால், எனக்கு செட் ஆகவில்லை. அதே போல யாரிடமாவது பீல் பண்ணி ஒரு விஷயத்தை சொன்னால், நல்லா நடிக்கிது என்று தான் சொல்கிறார்கள், என்னை பற்றி தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

Actress Sona gave an emotional interview that she is not married because she is a glamorous actress

மனம் உடைந்த பேட்டி: சினிமாவில் மட்டும் தான் நான் கவர்ச்சி நடிகை, நிஜவாழ்க்கையில் நான் சமைப்பேன், என் வீட்டு வேலையை நான் தான் பார்க்கிறேன் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். இதற்காக ஒவ்வொருவரிடமும் சென்று என்னால் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க முடியாது. கவர்ச்சி நடிகையாக நடித்து ஏதோ நான் பெரிய தவறு செய்துவிட்டதுபோல மனசு வலித்தது. இதனால், பல வருடமாக வீட்டைவிட்டே வெளியில் வரவில்லை என்று நடிகை சோனா மன வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X