அனைவர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..இனி அட்ஜஸ்ட்மெண்ட்னு கேட்டா அடிதான்..நடிகை சோனா!

சென்னை : அட்ஜஸ்ட்மெண்ட்னு யாராவது வந்தா அடிதான் என்று கவர்ச்சி நடிகை சோனா கோபத்தில் கொந்தளித்து பேசி உள்ளார்.

நடிகை சோனாவை தெரியாத இளசுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குதூகலமாக வைத்திருப்பதில் இவர் ஸ்பெஷல்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை சோனா.

நடிகை சோனா

நடிகை சோனா

சென்னையில் பிறந்து வளர்ந்த சோனா இயக்குநர் சாமி இயக்கத்தில் வெளியான, மிருகம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். இதையடுத்து அழைப்பிதழ், அழகர் மலை, பத்து பத்து, லவ்ஸ், சோக்காளி, சோ, குசேலன் போன்ற படங்களில் நடித்துள்ளார். குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருப்பார் சோனா.

சின்னத்திரையில் சோனா

சின்னத்திரையில் சோனா

தற்போது வாய்ப்பு இல்லாததால், சின்னத்திரை பக்கம் வந்த சோனா,மாரி, அபிடெய்லர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக எடுத்தது போல தனது வாழ்க்கையையும் படமாகவோ, வெப் சீரிசாகவோ எடுக்க இருப்பதாக கூறியிருந்தார்.

எல்லாமே குடும்பத்திற்காகத்தான்

எல்லாமே குடும்பத்திற்காகத்தான்

சமீபத்தில் நடிகை சோனா அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவுக்கு வந்ததே எதர்ச்சியாக நடந்த விஷயம் தான், படங்களில் நடிப்பேன் என்று எனக்குத் தெரியாது. நான் கூச்ச சுபாவம் கொண்டவள் என்பதால், எனக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதே பிடிக்கவில்லை. ஆனால்,குடும்பம் கொஞ்சம் கஷ்டத்தில் இருந்ததால் நான் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அட்ஜஸ்ட்மெண்ட்னு கேட்டா அடிதான்.

அட்ஜஸ்ட்மெண்ட்னு கேட்டா அடிதான்.

ஆரம்பத்தில் நான் நடித்த படங்களில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ரொம்ப நல்ல டீம். அதனால் தான் படங்களில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆர்வமே அதிகமானது. ஆனால், அதன் பின் அட்ஜஸ்ட்மெண்ட்னு பேச்சு வந்ததால், கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், இப்போ வந்து யாராவது அட்ஜஸ்ட்மெண்ட்னு கேட்டா அடிதான். அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு கூப்பிடுபவர்கள் வீட்லயும் பெண்கள் இருக்கிறார்கள் அதை மனதில் வைத்துக்கொண்டு நடந்து கொள்ளுங்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X