Sona - கவர்ச்சி நடிகை சோனா எடுக்கும் பயோபிக்.. என்னென்ன சம்பவங்கள் வெளியே வரப்போகுதோ?

சென்னை: Sona (சோனா) கவர்ச்சி நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து ஸ்மோக் என்ற இணைய தொடரை இயக்கவிருக்கிறார்.

பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் கேரக்டர் ரோலில் அறிமுகமானவர் சோனா. அந்தப் படம் வெற்றி பெற்றாலும் சோனா எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது. அதாவது திடீரென அவர் கவர்ச்சியின் பக்கம் திரும்பினார். அதன்படி அவர் பத்து பத்து, மிருகம் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார்.

actress Sona is going to direct a web series called Smoke based on the events that happened in her life

பயோபிக்: ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போக தற்போது இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அதன்படி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து திரைக்கதை எழுதி ஸ்மோக் என்ற வெப் தொடரை இயக்குகிறார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஸ்மோக் இணைய தொடரில் என்னுடைய வாழ்வில் நடந்த 99 சதவீத சம்பவங்களை காட்சிகளாக அமைத்திருக்கிறேன்.

வாங்கிய அடி: அதில் நான் அனுபவித்த வலி, வாங்கிய அடி, என்னுடைய காதல் என அனைத்து விஷயங்களையும் சொல்லவிருக்கிறேன். என்னை கவர்ச்சி நடிகை என்று அழைத்தது பெரும் வலியை எனக்கு கொடுத்தது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சி நடிகை என்று அழைத்ததால் எனக்கு திருமணம்கூட நடக்கவில்லை. திரைப்படத்தில் கவர்ச்சியாக நடிப்பவள்தானே அவள் என்று கூறினார்கள்.

சாதாரண பெண்: நானும் ஒரு சாதாரண பெண்தான். சமைப்பேன், வீட்டு வேலை அனைத்தையும் செய்வேன். இருந்தாலும் எனக்கு திருமணம் ஆகவில்லை. அதற்கு ஒரே காரணம் என் மீது குத்தப்பட்ட கவர்ச்சி நடிகை என்ற முத்திரைதான். அந்த முத்திரையை மாற்றுவதற்காக பல முயற்சிகளை செய்தேன். தொலைக்காட்சி தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தால் பெயர் மாறும் என்று நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை.

ஏன் சினிமாவுக்கு வந்தோம்: ஆரம்பத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஏன் இந்த சினிமாவுக்கு வந்தோம் என்றெல்லாம் தோன்றியது. எனக்கு மட்டும் ஏன் இது இப்படி இருக்கிறது என்கூட நினைத்திருந்திருக்கிறேன். சில சமயம் சினிமாவை விட்டு சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் சினிமா என்பது ஒரு மாயை என்பதை உணர்த்து வகையில் என்னை மீண்டும் இங்கு இழுத்துவிடுகிறது.

வசைபாடினாலும் சரி: ஸ்மோக் இணைய தொடரில் என்னை வசைபாடினாலும் சரி. இதில் சொல்வது அனைத்துமே உண்மைதான். அதேபோல் இந்தத் தொஅரில் ஒருவரை குற்றம் சொல்ல எந்தக் காட்சியையும் வைக்கவில்லை. இரண்டு தரப்பு நியாயங்களை காட்சிகளாக எழுதியிருக்கிறேன்" என்றார். முன்னதாக ஒரு பார்ட்டி ஒன்றில் எஸ்பிபி மகன் எஸ்பி சரண் என்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று சில வருடங்களுக்கு முன்பு சோனா குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது. அதுதொடர்பான விவகாரங்கள் எல்லாம் இந்த இணையத் தொடரில் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Read more about: sona சோனா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X