பிரேம் ஜி அந்த மாதிரிதான்..எப்படி பிறந்தார்னு தெரியல.. சோனா என்ன இப்படி சொல்லிட்டாங்க?

சென்னை: தமிழ் சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்தவர் சோனா. கவர்ச்சி நடிகையாக அறியப்படும் சோனா இன்றுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து ஸ்மோக் என்றொரு படத்தையும் இயக்கவிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் சமீபத்தில் சில பேட்டிகளை கொடுத்தார். அந்தவகையில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் பிரேம் ஜி குறித்து சில விஷயங்களை பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் சோனா. அந்தப் படத்தில் குணசித்திர வேடங்களில் நடித்த அவர் அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் திடீரென அவர் கிளாமர் ரூட் பக்கம் சென்றார். அதன்படி வரிசையாக அவர் நடித்த படங்களில் கிளாமர் வேடங்களே கிடைத்தன. பத்து பத்து, குசேலன், மிருகம் என ஏராளமான படங்களில் கவர்ச்சி வேடங்களில் தோன்ற ஆரம்பித்தார். அதனால் அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

Actress Sona Open Talks about Premgi Amaran at Latest Interview

குசேலன்: சோனாவை பொறுத்தவரை கிளாமர் நடிகை என்பதை தாண்டி நல்ல நடிகை என்று குசேலன் படத்தில் நிரூபித்திருப்பார். அதிலும் அவருக்கு கவர்ச்சி வேடம்தான் என்றாலும் ஒரு சில சீன்கள் நன்றாகவே நடிக்க செய்திருப்பார். ஆனால் என்ன காரணத்தினாலோ சோனாவுக்கு கிளாமர் வேடங்களை தவிர்த்து வேறு எந்த வேடமும் பெரிதாக கிடைக்கவில்லை.

பிரச்னை: இதற்கிடையே சர்ச்சைகளிலும் அவர் சிக்குவதுண்டு. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ட்டியில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, எஸ்.பி.பி சரண் ஆகியோர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்கள் என்று புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பினார். அவர் புகார் கொடுத்த மூன்ற பேரும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்கவர்கள். இதன் காரணமாக இந்த விவகாரம் பெரிய புயலை கிளப்பியது. அதற்கு பிறகு அந்தப் பிரச்னை ஒரு வழியாக ஓய்ந்துவிட்டது.

திருமணம் செய்துகொள்ளாத சோனா: அதேபோல் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதேசமயம் அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், என்னை திருமணம் செய்துகொள்வதற்கு யாருமே தயாராக இல்லை. மாறாக வைத்துக்கொள்கிறேன் என்றுதான் சொல்வார்கள். முக்கியமாக என் மீது கிளாமர் ஹீரோயின் என்ற இமேஜ் இருப்பதன் காரணமாக அவர்கள் யாரும் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்கள்போல" என்றும் சோனாவே குறிப்பிட்டிருந்தார்.

பிரேம் ஜி ஒரு பழம்: சோனா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து ஸ்மோக் என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரேம்ஜி அமரன் குறித்து பேசுகையில், "உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பிரேம் ஜி ஒரு பழம். பழம் என்றால் நல்ல பழம். அவர்கள் குடும்பத்தில் அவர் எப்படி பிறந்தார் என்று தெரியவில்லை. உண்மையிலுமே அவர் ரொம்ப ரொம்ப நல்லவர். தாமதமாக திருமணம் செய்துகொண்டாலும் அவர் அவரது மனைவியை நன்றாகத்தான் பார்த்துக்கொள்வார். சிலர் ஆண்கள் குடும்பத்தின் மீது ரொம்பவே அக்கறையாக இருப்பார்கள். அவரும் அந்த மாதிரிதான். பிரேம்ஜி கொஞ்சம் அதிகமாக குடிப்பார்தான். திருமணம் ஆன பிறகு அதை கொஞ்சம் குறைத்துவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X