நடிகை சோனாவின் தாயார் மரணம்
சென்னை: நடிகை சோனாவின் தாயார் நேற்று திடீர் மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 60.
பிரபல கவர்ச்சி நடிகை சோனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். கவர்ச்சி, காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர், தனது தாயுடன் சென்னையில் வசித்து வந்தார்.

இப்போது பிரசாந்துடன் ஜானி படத்தில் நடித்து வருகிறார் சோனா.
நேற்று நன்றாக இருந்த சோனாவின் தாயார், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. சோனாவுக்கு திரையுலகினர் பலரும் ஆறுதல் கூறியுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications