உயிருக்கு உயிரா காதலிச்சேன்.. ஏமாத்திட்டாங்க.. நம்பிக்கையே போச்சு.. மனம் திறந்த பிரபல நடிகை!
சென்னை: தான் உயிருக்கு உயிராய் காதலித்த இருவருமே தன்னை ஏமாற்றிவிட்டதால் தனக்கு திருமணத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டதாக பிரபல நடிகை மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை சோனா பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
தமிழ் சினிமாவில் சில படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பல சர்ச்சைகளில் சிக்கினார்.

பச்ச மாங்கா
இருப்பினும் தமிழ்,மலையாளம் என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் விளம்பரம் என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து பச்ச மாங்கா என்ற மலையாள படத்தில் நடித்தார் சோனா. அதில் அதீத கவர்ச்சி காட்டியதால் அதிகம் விமர்சிக்கப்பட்டார்.

ஏன் திருமணம் செய்யவில்லை?
தொடர்ந்து சேஸிங், பரமபதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிப்பதை நிறுத்தி விட்டதாக அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சோனா, 40 வயதான தான் ஏன் இதுவரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை என மனம் திறந்து பேசியுள்ளார்.

ஏமாற்றிவிட்டார்கள்
அதாவது, தனது வாழ்க்கையில் இரண்டு முறை காதல் குறுக்கிட்டுள்ளதாக கூறியுள்ள சோனா, ஒருவரை 6 வருடங்களும் மற்றொருவரை 7 வருடங்களும் உயிருக்கு உயிராக காதலித்ததாக கூறியிருக்கிறார். திருமணம் வரை சென்ற நிலையில் இருவருமே தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார் சோனா.

சுய சரிதை
இதனால் தனக்கு திருமணத்தின் மீதும் காதல் மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள சோனா குழந்தையை தத்தெடுத்து வளர்க்க போவதாக கூறியிருக்கிறார். ஏற்கனவே தனது சுயசரிதையை எழுதி வருவதாக கூறிய சோனா தற்போது சுய சரியதையை எழுதி முடித்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
Recommended Video

முக்கிய ரகசியங்கள்
அதில் பலர் குறித்த பல முக்கியமான ரகசியங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை சோனா. லாக்டவுன் முடிந்த பிறகு புத்தகமாக தனது சுயசரிதையை வெளியிடும் பணிகள் தொடங்கும் என்றும் கூறியிருக்கிறார் சோனா.


Click it and Unblock the Notifications











