ஜெய் ஒரு பிளே பாய்.. சேட்டை பிடிச்ச குசும்புக்காரன்.. இதை சொன்னது யார் தெரியுமா?

சென்னை: பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஜெய். பின்பு சென்னை 28 படத்தின் மூலம் ரசிகர்கள் அடையாளம் கண்டனர். அதனைத்தொடர்ந்து வாமனன், சுப்ரமணியபுரம் என பல படங்களில் நடித்து வருகிறார். ஜெய் - அஞ்சலியும் லிவிங் லைப்பில் இருந்து வந்த நிலையில், இருவரும் பிரிந்தனர். இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், ஜெய் ஒரு பிளே பாய் என கவர்ச்சி நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் தான் அஞ்சலி பிரிந்து சென்றாரோ என்றும் நெட்டிசன்கள் சந்தேகிக்கின்றனர்.

திரையுலகில் ஒரு நடிகர், நடிகைகள் இருவரும் தொடர்ந்து 2 படங்கள் சேர்ந்து நடிக்க தொடங்கிவிட்டாலே அது காதல் தான் என செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்படும். அதேபோன்று தமிழ் சினிமாவில் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இசையமைப்பாளர் தேவாவின் நெருங்கிய உறவினராக இருக்கும் ஜெய்க்கு நடிக்கும் வாய்ப்பை அளித்தவர் இயக்குநர் வெங்கடேஷ், இதனை அவர் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். ஆனால், ஜெய் - அஞ்சலி காதல் விசயம் திரை பிரபலங்கள் பலருக்கும் தெரியும்.

jai is a Playboy Jai sweet rascal sona

எங்கேயும் எப்போதும்: இயக்குநர் சரவணன் இயக்கிய எங்கேயும் எப்போதும் படத்தில் நடிக்க தொடங்கியபோது ஜெய்யும் அஞ்சலியும் நண்பர்களாக பழகி காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. பின்பு பல நிகழ்ச்சி மேடைகளில் இருவரும் ஒன்றாகவே வலம் வந்தனர். ஜெய் கூட ஒரு பேட்டியில், நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. அதை எப்படி என்று தெரியவில்லை, எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்திருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

பிளே பாய்: பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் கவர்ச்சி நடிகை சோனா, ஜெய் பற்றி தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கும் ஷாக் அளித்துள்ளது. சோனா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் நண்பர்களாக இருந்ததாக சோனாவே தெரிவித்துள்ளார். நண்பர்கள் குரூப்பில் இருந்தபோது பல லூட்டிகளை அடித்துள்ளோம் என தெரிவித்த சோனா, ஜெய் ஒரு பிளே பாய். பக்கா ஊமை குசும்பு. நல்ல பையன்தான். ஆனா அவன் பாதையை ஏன் மாத்திக்கொண்டான் என்பது தான் தெரியவில்லை. நல்லா படம் பண்ணிட்டு இருந்தான். இப்போ நான் கேள்விப்பட்ட வரைக்கும் அவன் நல்லா இல்லைன்னு தான் சொல்றாங்க. அவனை பற்றி இப்படி கேட்கும்போது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது என சோனாவே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

jai is a Playboy Jai sweet rascal sona

முரட்டு சிங்கிள்: ஜெய் நண்பர்கள் குழுவில் திருமணமே வேண்டாம் என்று இருந்த பிரேம்ஜி திருமணம் செய்துகொண்டார். வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட ஜெய் கல்யாணம் தான் அடுத்து இருக்கும் என எதிர்பாக்கிறோம் ஆனால், அவன் என்ன முடிவு எடுக்கிறான் என்பது எங்களுக்கு தெரியலை என தெரிவித்திருந்தார். 40 வயது ஆகியும் ஜெய் முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த படங்களும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஒரு வேளை காதல் பிரேக் அப்தான் அவரை இப்படி மாற்றியிருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அஞ்சலி - ஜெய் காதல் பிரேக் அப்பிற்கு பிறகு எத்தனை காதல் வந்து சென்றிருக்கும் என்பது தான் தெரியவில்லை என நெட்டிசன்கள் கதைக்க தொடங்கி விட்டனர்.

More from Filmibeat

Read more about: சோனா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X