அய்யோ நம்பாதீங்க.. என்மேல வீணா பழி சுமத்தியிருக்காங்க.. நான் மோசடி செய்யல.. பதறும் நடிகை!

மும்பை: பண மோசடி தொடர்பாக நடிகை சோனாக்ஷி சின்ஹா விளக்கமளித்துள்ளார்.

இந்தியில் முன்னணி நடிகைகளுல் ஒருவராக இருப்பவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்தார்.

இதன் மூலம் தமிழிலும் அறியப்பட்டார் சோனாக்ஷி சின்ஹா. இந்நிலையில் அவர் மீது அண்மையில் உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஏமாற்றிய சோனாக்ஷி

ஏமாற்றிய சோனாக்ஷி

அதாவது நடிகை சோனாக்ஷி சின்ஹா, கடந்த ஆண்டு டெல்லியில் தனியார் அமைப்பு நடத்திய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 4 தவணைகளாக ரூ.37 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

வீட்டில் விசாரணை

வீட்டில் விசாரணை

மேலும் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டதாகவுத் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சோனாக்ஷியின் வீட்டிற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர்.

பெயரைக் கெடுக்க சதி

பெயரைக் கெடுக்க சதி

இந்நிலையில் தன் மீதான புகார் குறித்து நடிகை சோனாக்ஷி சின்ஹா டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தனது கிரிஸ்டல் கிளியர் இமேஜை கெடுப்பதற்காகவும் தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இப்படி ஒரு அபாண்டமான பழியை சுமத்தியுள்ளனர்.

சோனாக்ஷி கோரிக்கை

இதுதொடர்பான விசாரணையில் முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்காகவும் நேர்மையற்ற ஒரு மனிதருக்காகவும் ஊடகங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டாம் என்றும் சோனாக்ஷி சின்ஹா கோரிக்கை விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X