அய்யோ.. அவர்கூடவா.. முன்னணி நடிகருடன் ஜோடி போட மறுத்த ரஜினி ஹீரோயின்.. வயதை குறிப்பிட்டு மறுப்பு!

சென்னை: நடிகை சோனாக்ஷி சின்கா, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகருடன் இணைந்து நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் பாலகிருஷ்ணா. இவர் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்டி ராமா ராவின் மகனாவார்.

தற்போது 59 வயதை கடந்துள்ள பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா.

யோயபதி ஸ்ரீனி

யோயபதி ஸ்ரீனி

இந்நிலையில் அவருடன் இணைந்து நடிக்க பிரபல நடிகை ஒருவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாலகிருஷ்ணா தற்போது யோயபதி ஸ்ரீனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

இப்படத்தில் கதாநாயகியாக மெட்ராஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான கேத்தரின் தெரசா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதற்கு முன்னதாக இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

வயதை குறிப்பிட்டு

வயதை குறிப்பிட்டு

தற்போது அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு சோனாக்‌ஷி சின்கா மறுத்ததாக கூறப்படுகிறது.

ரஜினிக்கு ஜோடி

ரஜினிக்கு ஜோடி

சோனாக்‌ஷி சின்கா தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா' படத்தில் நடித்திருந்தார். அண்மையில் நடிகை சோனாக்ஷி சின்கா மீது பண மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X