சோனாலி போகத் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது.. பண்ணை வீட்டில் லேப்டாப் திருடியதாக புகார்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமும் நடிகையுமான சோனாலி போகத் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
முன்னதாக மாரடைப்பால் இந்த மரணம் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போலீசார் வழக்கில் தொடர்புடைய இருவரை கைது செய்தனர்.

பிக்பாஸ் பிரபலம் சோனாலி போகத்
பிரபல பிக்பாஸ் பிரபலம் மற்றும் நடிகையான சோனாலி போகத் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவில் பார்ட்டி ஒன்றில் தனது நண்பர்களுடன் கலந்துக் கொண்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

சாவில் மர்மம்
ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் சாவதற்கு முன்னதாக, தன்னுடைய அம்மாவில் போன் செய்த சோனாலி, தன்னுடைய உணவில் எதுவோ கலக்கப்பட்டுள்ளதாகவும் சாப்பிட்ட பின்பு தன்னுடைய உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததாகவும் சோனாலி சகோதரி போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்த கைது
இதையடுத்து இந்த வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, சோனாலியின் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் தொடர்புடைய போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கைது
முன்னதாக சோனாலியின் ஹரியானா பண்ணை வீட்டில் இருந்த லேப்டாப், சிசிடிவி கேமரா உட்பட முக்கியப் பொருள்கள் காணாமல் போயிருக்கின்றன. இதுகுறித்து போலீசாரிடம் சோனாலியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐயிடம் ஒப்படைக்கப்படுமா?
சோனாலி போகத் மர்ம சாவிற்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் விசாரணை கட்டத்திலேயே உள்ளது. இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கு விசாரினையை சிபிஐயிடம் ஒப்படைக்க தயார் என்று கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











