Sonia Agarwal: அழ வைத்த செல்வராகவன்.. தனுஷ் செஞ்ச விஷயம்.. சோனியா அகர்வால் பகிர்ந்த தகவல்!

சென்னை: நடிகை சோனியா அகர்வால், தனுஷ், கிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றவர்.

ஒரு கட்டத்தில் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்தத் திருமணம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.

செல்வராகவனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவருடன் விவாகரத்து பெற்றுக் கொண்டார் சோனியா அகர்வால்.

Actress Sonia Agarwal interview on her ex husband Director Selvaragavan

செல்வராகவன் குறித்த உண்மைகளை வெளிப்படுத்திய சோனியா அகர்வால்: நடிகை சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்தின்மூலம் தான் தமிழில் அறிமுகமானார். தனுஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தில் அவரை இயக்குநர் செல்வராகவன் அறிமுகப்படுத்தியிருந்தார். முன்னதாக தெலுங்குப் படத்தில் நடித்திருந்த சோனியா அகர்வால் இந்தப் படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில், தொடர்ந்து செல்வராகவன் தன்னுடைய ரஜி ரெயின்போ காலனி படத்திலும் அவருக்கு நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருந்தார்.

புதுப்பேட்டை உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ள சோனியா அகர்வாலுக்கும் செல்வராகனுக்கும் காதல் பிறந்த நிலையில், இருவரும் கடந்த 2006ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். சில காலத்திலேயே இவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து இவர்கள் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். இதனிடையே 10 ஆண்டுகள் கழித்து தற்போது தன்னுடைய விவாகரத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் சோனியா அகர்வால்.

திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது என்று தனது கணவன் குடும்பத்தினர் தன்னை டார்ச்சர் செய்ததாகவும் இதனால் தான் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளானதாகவும் அவர் சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் இதையடுத்து செல்வராகவனை விவாகரத்து செய்ய அவரது குடும்பத்தனர் தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதனிடையே காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது, காட்சிகள் சரியாக வராத நிலையில் தன்னை பலமுறை திட்டி செல்வராகவன் அழ வைத்ததாகவும் இதனால் தான் மனமுடைந்து போகும் போதெல்லாம் தன்னை தனுஷ்தான் சமாதானம் செய்வார் என்றும் சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார். அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க என்று தனுஷ் தன்னை சமாதானம் செய்வார் என்றும் பலமுறை தனுஷுடன்தான் தான் பழகியுள்ளதாகவும் சோனியா அகர்வால் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

சோனியா அகர்வால் தன்னுடைய விவாகரத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, சோனியாவை விவாகரத்து செய்த செல்வராகவன் மறுமணம் செய்துக் கொண்டார். அவருக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இயக்குநராகவும் நடிகராகவும் அவர் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார். தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் டி50 படத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X