7ஜி டிரைலர் வெளியானது.. திகிலூட்டும் திரில்லர் படம்.. சோனியா அகர்வாலுக்கு கம்பேக் கொடுக்குமா?
சென்னை: காதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். இதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் ஹிட் படமான 7ஜி ரெயின்போ காலனி படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இவர் '7ஜி' என்று தலைப்பிடப்பட்ட படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
7ஜி ரெயின்போ காலனி படத்தில் அழகு பதுமையாக வரும் சோனியா அகர்வாலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. குறிப்பாக அந்த படத்தில் வரும் நினைத்து நினைத்துப்பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்...உன்னால் தானே நானே வாழ்கிறேன் என்ற பாடலை முணுமுணுக்காதவர்களே இருக்க முடியாது. இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், இன்று வரை காதல் பிரியர்களின் பேவரைட் பாடலாக இந்த பாடல் உள்ளது.

செல்வராகவனை பிரிந்தார்: செல்வராகவனுடன் படங்களில் இணைந்து நடித்த போது இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மிகவும் மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை தொடங்கிய அவர்கள் சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர். சோனியவை விவாகரத்து செய்த பின் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரண்டு மகனும் உள்ளனர்.
அடுத்தடுத்த படங்களில்: விவாகரத்துக்கு பின் சோனியா அகர்வால் ஒரு சில படங்களில் நடித்து வந்தார், அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கிய க்ரைம், த்ரில்லர் படமான கிராண்மா திரைப்படத்திலும், WARD 126, பிரபுதேவாவுடன் பஹிரா படத்திலும் நடித்தார். மேலும் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக Fall என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த வெப் தொடருக்கு நல்ல விமர்சனம் கிடைத்தது.
7ஜி டிரைலர்: தற்போது சோனியா அகர்வால், ஹாரூன் இயக்கத்தில் உருவாகி உள்ள 7ஜி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். சிதார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்தை, ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரர், த்ரில்லர் பணியில் உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டிரைலர் தொடங்கும் போது, புதிய அபார்ட்மெண்டில் 7ஜிக்கு குடியேறும் ஸ்மிருதி வெங்கட் வீட்டில் இருக்கும் அந்த அமானிஷ்யம் என்ன.. அந்த 7ஜி வீட்டில் என்ன நடந்தது என்ற ஆவலை படத்தின் டிரைலர் ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











