செல்வராகவன் குடும்பத்தால்தான் என்னுடைய ஆசை நடக்காமல் போனது.. நடிகை சோனியா அகர்வால் வேதனை
சென்னை: நடிகை சோனியா அகர்வால் தான் செல்வராகவனை திருமணம் செய்த பிறகு எதனால் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்பது பற்றி சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதே நேரத்தில் சோனியா அகர்வால் சொன்ன வார்த்தை பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.

பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர் இருக்கும் குடும்பத்தில் சோனியா அகர்வாலுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துக்களும் வலம் வருகிறது அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகை சோனியா அகர்வால் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற ஹிட்டான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தயாரித்த நான்கு படங்களில் இவரைத்தான் கதாநாயகியாக நடிக்க வைத்திருந்தார். அதன் நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
பிறகு திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு சோனியா அகர்வால் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார். அந்த நிலையில் தான் 2006 ஆம் ஆண்டு திருமணம் கொண்ட சோனியா அகர்வால் கருத்து வேறுபாடு காரணமாக 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிறகு தனியாக வாழ்ந்து வருகிறார்.

விவாகரத்திற்கு பிறகு சில சீரியல்களிலும், வெப் சீரிஸ்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக சோனியா அகர்வால் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் செல்வராகவனை திருமணம் செய்து இருந்த நிலையில் எதனால் நடிக்கவில்லை என்பது பற்றி பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் தனிப்பட்ட வாழ்க்கையில் இயக்குனர் செல்வராகவன் மிகவும் அமைதியான, பிசியான நபர். அவருடைய எழுத்தால் அவருக்கான சொந்த உலகில் இருப்பார். அது ஒரு நல்ல உறவாக இருந்தது. ஆனால் பிறகு ஏற்பட்ட பிரச்சனைகளை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. பிரிவுக்கு காரணம் ஏன் என்று எனக்கும் அவருக்கும் தெரியும். நாங்கள் பிரிந்து செல்ல முடிவெடுத்தோம்.
அதற்குப் பிறகு அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார். நானும் என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒன்றாக இருந்தவர்கள் எப்படி பிரிந்த பிறகு நண்பர்களாக மாறுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அது சாத்தியம் இல்லை என்று தான் நினைக்கிறேன். என்னால் அப்படியெல்லாம் வாழ முடியாது.
ஒருவேளை ஒரு சிலரால் அப்படி நண்பர்களாக வாழ முடியுமாக கூட இருக்கலாம். பிடிக்கவில்லை என்பதற்காக எதிரியாக மாறுவது என்ற அர்த்தமில்லை. அதுபோல திருமணம் ஆனதால் என்னுடைய தொழில் எதிர்பார்த்தபடி உயரவில்லை. திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. செல்வாவின் குடும்பத்தினரோ நான் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் தான் நான் நடிப்பை விட்டு விலகினேன்.
பிறகு இரண்டு வருடங்கள் கழித்து செல்வாவிடம் நடிப்பு பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் தான் ஒரு முறை குஷ்பூ உங்களால் சீரியலில் நடிக்க முடியுமா? என்று கேட்டார். அப்படித்தான் நான் மெல்ல மெல்ல மீண்டும் நடிக்க வந்தேன், என்று அந்த பேட்டியில் நடிகை சோனியா அகர்வால் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











