உங்க பிகினி பழசுன்னாலும் போட்டோ புதுசு தான..? ஜிகினா ஜின் நடிகையை ஜில்லென கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: தனது பிகினி பழசுதான் என்று கூறியுள்ள பிரபல நடிகையிடம், போட்டோ புதுசு தானே? என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

Recommended Video

படு கிளாமராக ஃபிட்னஸ் டிப்ஸ் குடுக்கும் சோஃபி சவுத்ரி - வீடியோ

விஷாலின் வெடி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தவர், இந்தி நடிகை ஷோபி சவுத்ரி.

அந்தப் படத்தில் இடம்பெற்ற 'நான் பாம்பே பொண்ணு' பாடலுக்கு இவர் ஆடியிருந்தார்.

ஷாதி நம்பர் 1

ஷாதி நம்பர் 1

விஷால் ஜோடியாக சமீரா ரெட்டி நடித்திருந்தார். படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் இந்தப் பாடல் மாஸ் ஹிட். பிறகு தமிழில் பாடல்களுக்கு ஆடவில்லை என்றாலும் இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஷோபி. அங்கு, டேவிட் தாவன் இயக்கிய காமெடி படமான, 'ஷாதி நம்பர் 1' மூலம் சினிமாவில் அறிமுகமான ஷோபி சவுத்ரி, தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ள ஷோபி, சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த நேனொக்கடைன் படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சோசியல் மீடியாதான் உலகம் என்றாகிவிட்டது, இப்போது. கிராமங்களில் இருந்து, பெருநகரங்கள் வரை எல்லோரும் அதில்தான் உருண்டு புரண்டு கொண்டிருக்கிறார்கள்.

கிளாமர், பிகினி

கிளாமர், பிகினி

இந்த கொரோனா காலத்தில், இதைப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. சில நடிகர், நடிகைகள் இதற்கு கிட்டதட்ட அடிமையாகவே மாறிவிட்டார்கள். ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமென்ட்களுக்குள் மொத்தமாக விழுந்து கிடக்கிற நடிகைகள், அதிக லைக்ஸ், கமென்ட் பெற கிளாமர் மற்றும் பிகினி ஸ்டில்களை வெளியிட்டு வருகின்றனர்.

மகிழ்ச்சி என்பது

மகிழ்ச்சி என்பது

அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளில் ஒருவர், ஷோபி சவுத்ரி. அவர் இப்போது வெளியிட்டுள்ள பிகினி போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, மகிழ்ச்சி என்பது ஒரு தொற்று. அதோடு இது அதே பிகினிதான். அதனால் என்ன? இதை சொந்தமாக வைத்திருக்கிறேன் என்று அர்த்தம்.

பிகினி பழசுன்னாலும்

பிகினி பழசுன்னாலும்

ஒவ்வொரு நாளும் புன்னகையுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கு நன்றியுடையவளாக இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஒருவர், பிகினி பழசுன்னாலும் போட்டோ புதுசு தான? என்று கேட்டுள்ளார். இந்த புன்னகை இருக்கே, அதுக்கு விலையே இல்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

மேஜிக்கல் பியூட்டி

மேஜிக்கல் பியூட்டி

சிலர் பிகினி உங்களுக்கு அப்படியே அம்சமாகப் பொருந்துது என்று தெரிவித்துள்ளனர். மேஜிக்கல் பியூட்டின்னு சொல்லுவாங்கள்ல, அதுதான் நீங்கதான் என்று சிலரும் கருப்பு கலரில் மின்னுகிறீர்கள் என்று சிலரும் வழிந்துள்ளனர். ஒரு ரசிகை, நானும் பிகினி டிரெஸ்க்கு டிரை பண்ணினேன், ஆனால், உங்க அளவுக்கு வரலை என்று கூறியுள்ளார். இந்த போட்டோ வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X